சென்னை: அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர், குமாரி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).
இவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், "கடந்த 16ஆம் தேதி உடற்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டில் குளித்துக்கொண்டு இருந்தபோது வென்டிலேட்டர் வழியாக அடையாளம் தெரியாத நபர் செல்போனில் படம்பிடிப்பது தெரிந்தது.
பெண்ணை வீடியோ எடுத்த விவகாரம்
அப்போது அதைக்கண்டு கூச்சலிட்ட உடன், அந்த நபர் வேகமாக தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
மேலும் அவர் பக்கத்து வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.
சட்டப்படிப்பு மாணவர் கைது
இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த நபரை அண்ணா நகர் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இக்குற்றத்தை தனியார் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வரக்கூடிய அரும்பாக்கத்தைச் சேர்ந்த பரத் (22) என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சர்ச்சையைக்கிளப்பிய சூர்யா தேவி தற்கொலையா.. க்ளைமேக்ஸில் போலீஸாருக்கே ட்விஸ்ட்