சென்னை: மாநகராட்சி கட்டுப்பாட்டில் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர் சேர்க்கை குறித்த புள்ளிவிவரத்தை சென்னை மாநகராட்சி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் ஜூலை 2ஆம் தேதி வரை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 93 ஆயிரத்து 445 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 18 ஆயிரத்து 991 பேர் புதிதாகவும், 12 ஆயிரத்து 477 பேர் தனியார் பள்ளிகளில் இருந்து மாநகராட்சி பள்ளிகளிலும் சேர்ந்துள்ளனர்.
அதிகபட்ச மாணவர் சேர்க்கை
- 5 ஆம் வகுப்பு - 8,052 பேர்
- 7ஆம் வகுப்பு - 7,758 பேர்
குறைந்தபட்சமாக எல்.கே.ஜி யில் 3, 130 பேர் சேர்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டில் டிசம்பர் வரை நடைபெற்ற மாணவர் சேர்க்கையின் முடிவில் 90 ஆயிரம் பேர் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு சேர்க்கை தொடங்கிய 15 நாட்களிலேயே 93 ஆயிரத்து 445 பேர் சேர்ந்துள்ளனர்.
செப்டம்பர் இறுதி வரை நடைபெறவிருக்கும் மாணவர் சேர்க்கையில் மேலும் அதிகளவில் மாணவர்கள் சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என மாநகராட்சி கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளிக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது குறித்த முடிவு? முதலமைச்சர் விளக்கம்!