ETV Bharat / state

‘தமிழ்நாட்டில் அமைதியை கெடுக்கும் வகையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு’ - எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் - தமிழ்நாட்டில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு

பாஜகவின் நெருக்கடி காரணமாக கைது செய்யப்பட்டுள்ள எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி அக்கட்சியின் மாநில தலைவர் முபாரக் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அமைதியை கெடுக்கும் வகையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு- எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்!

author img

By

Published : Sep 25, 2022, 9:17 PM IST

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள ஆங்காங்கே தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் சில சதிகார கும்பல்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் இத்தகைய நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது.

அதேவேளையில், இந்த பெட்ரோல் குண்டு வீச்சுடன் இஸ்லாமியர்களையும், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளையும் தொடர்புபடுத்துவது என்பது ஏற்புடையதல்ல. நடந்த சம்பவங்கள் குறித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய தமிழ்நாடு காவல்துறை, பாஜக தரும் நெருக்கடிகளை சமாளிக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளை கைது செய்வது என்பது கண்டனத்திற்குரியது.

சேலத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது தொடர்பாக, பாஜகவின் நெருக்கடி காரணமாக உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல், சம்பவத்திற்கு தொடர்பில்லாத, காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என முறையிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் செய்யது அலி மற்றும் கிளை தலைவர் காதர் உசேன் ஆகியோரையே வழக்கில் குற்றப்படுத்தி காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற பெயரில் மேலும் 5 பேரை கைது செய்திருப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையின் இந்த நடவடிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. உடனடியாக தமிழ்நாடு காவல்துறை அவர்களை விடுதலை செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல், கோவையில் இந்த விவகாரம் தொடர்பாக நள்ளிரவு நேரங்களில் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பதட்டத்தை ஏற்படுத்தும் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கேள்வியெழுப்பிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி மாநில செயலாளர் அப்துல் கரீம் உள்ளிட்டவர்களை விசாரணை என்கிற பெயரில் காவல்நிலையத்தில் வைத்திருப்பது என்பதும் கண்டிக்கத்தக்கது.

கடந்த 22தேதி தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும், என்.ஐ.ஏ.வால் ஒரு போலியான குற்றச்சாட்டை முன்வைத்து போலியான தேடுதல் வேட்டை நடத்தி, பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் அநீதியான முறையில், சிறுபான்மை விரோத போக்குடன் கைது செய்யப்பட்டது தொடர்பாக, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இயக்கங்கள், கட்சிகள் மற்றும் ஜமாத்துகள் சார்பாக பல்வேறு இடங்களில் மிகப்பெரும் அளவில் மக்கள் எழுச்சி போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

அந்த போராட்டத்தின் வீரியத்தை குறைக்கவும், அதனை திசைதிருப்பவுமே இதுபோன்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும், அதனைத் தொடர்ந்த பாஜக தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா உள்ளிட்டவர்களின் வன்முறையை தூண்டும் பேச்சுகளும் அமைந்துள்ளதாகவே தெரிகிறது.

மாநில காவல்துறை அதிகாரங்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் என்.ஐ.ஏ. மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது தமிழ்நாடு காவல்துறை முற்றிலும் தலைகுனிந்து நின்றது தொடர்பாக தமிழ்நாடு ஜனநாயக சக்திகள் கேள்வி எழுப்பிய சூழலில், தற்போது காவல்துறையின் சட்ட ஒழுங்கு நடவடிக்கையை குற்றப்படுத்தும் பாஜகவின் அரசியல் அழுத்தங்கள், நெருக்கடிகளுக்கு துணைபோவது என்பது முதலமைச்சரின் கீழ் செயல்படும் மாநில காவல்துறையின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துகிறது.

கடந்த காலங்களில் அரசியல் விளம்பரத்துக்காகவும், போலீஸ் பாதுகாப்புக்காகவும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் தனக்குத் தானே பெட்ரோல் குண்டு வீசியதும், தங்களைத் தாங்களே தாக்கிக் கொண்ட நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் அரங்கேறின. அதேபோல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை திட்டமிட்டு சீர்குலைக்கவும், அதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி தருவதுமான பாஜக மேற்கொள்ளும் திட்டமிட்ட அரசியல் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, காவல்துறை இந்த விவகாரத்தில் பாஜகவின் அரசியல் நெருக்கடிகளுக்கு அடிபணியாமல், நேர்மையான முறையில் தங்கள் விசாரணை நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் செய்யது அலி மற்றும் கிளை தலைவர் காதர் உசேன் உள்ளிட்ட ஆகியோரையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற பெயரில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், கோவையில் விசாரணை என்கிற பெயரில் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட வர்த்தகர் அணி மாநில செயலாளர் கரீம் அவர்களையும் விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

சிறுபான்மை விரோதப்போக்கு கொண்ட பாஜகவின் அரசியல் நிர்பந்தங்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு தமிழ்நாடு காவல்துறை ஒருபோதும் அடிபணிந்துவிடக் கூடாது. இந்த விவகாரத்தில் அவசரக் கோலத்தில் அப்பாவிகளை சிறைப்படுத்தாமல், நேர்மையான முறையில் விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளை கைது செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு அமைதி பூங்காவாக தொடர்ந்து திகழ தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும். அதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவினையும் வழங்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதையும் படிங்க:பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின்கீழ் கைது - டிஜிபி சைலேந்திரபாபு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.