ETV Bharat / state

'ஸ்டெர்லைட் விவகாரத்தில் மனிதம் காத்த தீர்ப்பு' - அரசியல் ஆளுமைகளின் கருத்து

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தடை தொடரும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

'கொண்டாட்டத்தில் தூத்துக்குடி' - அரசியல் ஆளுமைகளின் கருத்து

author img

By

Published : Aug 18, 2020, 12:35 PM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (ஆகஸ்ட் 18) விசாரித்தது. காணொலி காட்சி மூலமாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தடை தொடரும். வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்" என்று கூறி உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து, தீர்ப்பின் மீதான தங்களின் பார்வையை அரசியல் தலைவர்களும் வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், "அரசு ஏற்கெனவே அறிவித்தபடி பல கோடி மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது. தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

  • தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

    சுற்றுச்சுழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது.#Sterlite

    — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

திமுக தலைவர் ஸ்டாலின் "ஸ்டெர்லைட் ஆலை வழக்கிற்கு வழங்கப்பட்டுள்ள நீதி, மனித குலத்தை காக்கும் தீர்ப்பு" என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து திமுக எம்.பி., கனிமொழி, சுற்றுச்சூழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துவதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

  • ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி.

    இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான்.

    மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று.

    — Kamal Haasan (@ikamalhaasan) August 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "இந்தத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க; 'ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு: நீதிக்கு கிடைத்த வெற்றி' - வைகோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.