ETV Bharat / state

'மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம்!' - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: தூத்துக்குடியில் நிலத்தடி நீர், காற்று மாசுபாடுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமாக இருந்ததால் ஆலையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான முறை ஆய்வு-மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம்!
author img

By

Published : Aug 3, 2019, 4:33 AM IST

Updated : Aug 3, 2019, 8:13 AM IST

வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜரானார்.

அப்போது அவர் தனது வாதத்தில், "2018இல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஐந்து ஆண்டு அனுமதி கேட்டபோது, தண்ணீர் மாசுபாடு, காப்பர் கழிவுகளை முறையாக நீக்காதது உள்ளிட்ட காரணங்களால் அனுமதி நீட்டிக்க மறுக்கப்பட்டது. போதுமான அவகாசம் வழங்கிய பின்னரும் ஸ்டெர்லைட் ஆலை தன்னுடைய தவறை திருத்திக் கொள்ளவில்லை.

2018இல் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் செயல்படக்கூடாது என முதலில் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் ஆலை தொடர்ந்து இயங்கியதால் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது. நிலத்தடி நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு, காப்பர் கழிவுகள் வெளியேற்றம், கடல் நீர் மாசுபாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆலை மூடப்பட்டது.

ஆலை கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, குடிநீர் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. 2016இல் ஆலையை சுற்றிய கிராமங்களில் ஆர்சனிக், சிங்க், சல்பர், குளோரைடு ஆகியவைகளின் அளவு நிலத்தடி நீரில் அதிகமாக இருந்தது.

2017 ஆகஸ்டில் ஆலையை சுற்றிய கண்காணிப்புப் பகுதி, ஆலை அருகே உள்ள கிணற்றில் ஆய்வு செய்தபோது, குளோரைடு 200 விழுக்காடு நிலையாகவும், சல்பைட் 200 விழுக்காடு நிலையாகவும், கால்சியம் 75 விழுக்காடு என்ற அளவிலும் இருந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆலைகளிலிருந்து வெளியாகும் குளோரைடு உள்ளிட்ட வேதிப் பொருட்களின் அளவை விட ஸ்டெர்லைட் ஆலை அளவுக்கு அதிகமான மாசுபாட்டை வெளியேற்றியுள்ளது.

69 நிறுவனங்கள் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இருந்தாலும் அதிக பாதிப்பு உண்டாக்கும் சிவப்பு மண்டலமாக (red zone) ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே உள்ளது. கடல் மாசு அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட தூரம் 120 மீட்டர் மட்டுமே. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையால் கடல் நீர் 800 மீட்டர் தூரத்திற்கு மாசு அடைந்துள்ளது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் இன்னும் அதிகப்படியான மாசுபாடு ஆதாரங்கள் ஆய்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது" எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட வேதாந்தா நிறுவன வழக்கறிஞர், நீதிமன்றம் உத்தரவிட்டால் ஆலையில் உள்ள மாதிரிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

"254 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸ்டெர்லைட் ஆலை, 60 ஹெக்டேர் பரப்பளவில் கொட்டப்பட்டுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் அத்தியாவசிய தேவையான குடிநீரும், விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தடி நீரும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் நோக்கத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. ஆலை தொடங்கப்பட்டதிலிருந்துஏற்பட்ட விபத்துகள் குறித்த அனைத்து ஆவணங்களும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் உள்ளது.

100-க்கும் மேற்பட்ட முறை ஆய்வு செய்ததில், நிலத்தடி நீர், காற்று, கடல்நீர், மண் மாசுபாட்டிற்கான காரணம் ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமாக இருந்ததால் ஆலை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்து தனது வாதத்தை நிறைவுசெய்தார் சி.எஸ்.வைத்தியநாதன்.

இதையடுத்து, ஆலை தரப்பில் வாதம் செய்ய 2 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதால், செவ்வாய்க்கிழமை அரசு தரப்பு வாதத்தை தொடர அனுமதி வழங்கிய நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு, அதன் பிறகு ஆலை எதிர்ப்பாளர்கள் தரப்பில் வாதம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

Intro:nullBody:நூற்றுக்கணக்கான முறை ஆய்வு செய்ததில் நிலத்தடி நீர், காற்று மாசுபாடு, கடல்நீர் மாசுபாடு, மண் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமாக இருந்ததால் ஆலையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்
சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தில்

* 2018ல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க 5 வருட அனுமதி கேட்ட போது, தண்ணீர் மாசுபாடு, காப்பர் கழிவுகளை முறையாக நீக்காததால் அனுமதியை நீட்டிக்க மறுக்கப்பட்டது.

* போதுமான அவகாசம் வழங்கிய பின்னரும் ஸடெர்லைட் ஆலை தன்னுடைய தவறை திருத்திக் கொள்ளவில்லை.

* 2018 ல் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் செயல்படகூடாது என முதலில் தெரிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இயங்குயதால் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது.

* 5 முக்கிய காரணங்களுக்காக ஆலை மூடப்பட்டது. நிலத்தடி நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு ஆய்வு, காப்பர் கழிவுகள் வெளியேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆலை மூடப்பட்டது.

* ஆலை கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, குடிநீர் தரம் கடுமையாக பாதிக்கப்ட்டிருந்தது.

* 2016 ஆலையை சுற்றிய கிராமங்களில்
ஆர்சனிக், சிங்க், சல்பர், குளோரைடு ஆகியவைகளின் அளவு தண்ணீரில் அதிகமாக இருந்தது.

* 2017 ஆகஸ்டில் ஆலையை சுற்றிய கண்கானிப்பு பகுதி மற்றும் ஆலை அருகே உள்ள
கிணற்றில் ஆய்வு செய்த போது, குளோரைடு 200% நிலையாகவும், சல்பைட் 200% நிலையாகவும், கால்சியம் 75% என்ற அளவிலும் இருந்தது.

* தமிழகம் முழுவதும் உள்ள ஆலைகளில் இருந்து வெளியாகும் குளோரைடு உள்ளிட்ட வேத பொருட்களின் அளவை விட ஸ்டெர்லைட் ஆலை அளவுக்கு அதிகமான மாசுபாட்டை வெளியேற்றியுள்ளது.

* 1997 நீரி அறிக்கை : குளோரைடு, ஆர்சினிக், புளோரைடு, காப்பர் நிலத்தடி நீரில் கலந்திருப்பதாக தெரிவித்தது. ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே தூத்துக்குடியில் ஏற்பட்ட நீர் மாசுபாட்டிக்கு முக்கிய காரணம்.

* 69 நிறுவனங்கள் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இருந்தாலும் அதிக பாதிப்பு உண்டாக்கும் சிவப்பு மண்டலமாக (red zone) ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே உள்ளது.

* கடல் மாசு அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட தூரம் 120 மீட்டர் மட்டுமே. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையால் கடல் நீர் 800 மீட்டர் தூரத்திற்கு மாசு அடைந்துள்ளது.

* நீதிமின்றத்தில் ஆலையை சுற்றி எடுக்கப்பட்ட மண், கல் மற்றும் வண்டல் மண் சமர்ப்பிக்கப்பட்டது

* தொடர்ந்த பேசிய அரசு தரப்பு: அபாயகரமான கழிவு இல்லாத இடத்தில் இருந்து 6 மாதிரி எடுக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் ஆய்வு செய்ய முடியாத நிலையில் எப்படி ஆலையில் இருந்து மாதிரிகள் சேகரிக்கவில்லை.

* அப்போது குறுக்கிட்ட வேதாந்தா நிறுவன வழக்கறிஞர், நீதிமன்றம் உத்தரவிட்டால் ஆலையில் உள்ள மாதிரிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம் என தெரிவித்தார்

* தொடர்ந்து பேசிய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர், 254 ஏக்கர் பரப்பளவில் கொண்ட ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி 60 ஹெக்டேர் பரப்பளவில் கொட்டப்பட்டுள்ள கழிவு நீர் அகற்றப்படாததால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

* ஸடெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் அத்யாவசிய தேவையான குடிநீரும், விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தடி நீரும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

* மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு பணிகள் தற்போது நடந்து வருகிறது.

* ஆலை தொடங்கப்பட்டதிலிருந்து இருந்து ஏற்பட்ட விபத்துகளை குறித்த அனைத்து ஆவணங்களும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் உள்ளது.

* 100 க்கும் மேற்பட்ட முறை ஆய்வு செய்ததில், நிலத்தடி நீர், காற்று, கடல்நீர், மண் மாசுபாட்டிற்கான காரணம் ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமாக இருந்ததால் ஆலை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்து தனது வாதத்தை நிறைவு செய்தார்.

இதையடுத்து, அரசு தரப்பில் வாதம் செய்ய 2 நாட்கள் காலஅவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதால், செவ்வாய்கிழமை அரசு தரப்பு வாதத்தை தொடர அனுமதி வழங்கிய நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு, அதன் பிறகு ஆலை எதிர்ப்பாளர்கள் தரப்பில் வாதம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
Conclusion:null
Last Updated : Aug 3, 2019, 8:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.