ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலையை மட்டும் பொறுப்பாக்கக் கூடாது! - #Sterlite Case

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், வேதாந்தா நிறுவனம் துாத்துக்குடியில் ஏற்பட்ட மாசுபாடுகளுக்கு இந்த ஆலையை மட்டும் பொறுப்பாக்கக் கூடாது என வாதிட்டது.

sterlite-case
author img

By

Published : Jul 16, 2019, 10:05 PM IST

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தூத்துக்குடியில் ஏற்பட்ட மாசுபாடுகளுக்கு ஸ்டெர்லைட் ஆலையை மட்டும் பொறுப்பாக்கக் கூடாது என வேதாந்தா நிறுவனம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அவை பின்வருமாறு:

* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடல் மட்டத்தில் இருந்து 16 முதல் 18 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

* 2006ல் சோடியம் புளோரைடு, சோடியம் குளோரைடு, சல்பேட் என எந்த அமிலங்களின் அளவும் அதிகரிக்கவில்லை என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஆலையை மீண்டும் செயல்பட அனுமதி அளித்தது.

* ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 1.4 கிமீ தூரத்திற்கு பிறகே கடல் நீருடன் நிலத்தடி நீர் கலந்துள்ளது. இதற்கு எப்படி ஸ்டெர்லைட் ஆலையை காரணமாக குறிப்பிட முடியும்.

* ஆலையைச் சுற்றி கழிவு நீர் சுத்திகரிப்பு அனுமதிக்கப்பட்ட அளவு .001 அளவில் பாதிப்புகள் இருந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதிக்கப்பட்ட அளவு .05 உள்ளது.

* மத்திய அரசின் "நீரி" அமைப்பு அளித்த அறிக்கையில் ஆலையால் தண்ணீர் மாசுபாடு ஏற்படவில்லை என தெரிவித்தது. அறிக்கையை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

* ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட அனைத்து முறையிலும் எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை. அடிப்படை ஆதாரமற்ற ஏதாவது ஒரு காரணத்திற்காக மூடப்பட்டது.

* 1994 முதல் தற்போது வரை ஸ்டெர்லைட் ஆலையால் எந்த மாசுபாடும் ஏற்படவில்லை.

* 1989 முதல் கடல் நீர் உட்புக ஆரம்பித்துவிட்டது. ஆனால் அதன்பிறகு தொடங்கப்பட்ட ஆலையால்தான் கடல்நீர் உட்புகுந்ததாக கூறுவதை எப்படி ஏற்க முடியும்.

* இப்படி நுாறு உதாரணங்களை ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக சொல்ல முடியும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் தெரிவித்து தனது 5ஆம் நாள் வாதத்தை நிறைவு செய்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.

Intro:Body:ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தூத்துக்குடியில் ஏற்பட்ட மாசுபாடுகளுக்கு ஸ்டெர்லைட் ஆலையை மட்டும் பொறுப்பாக்க கூடாது என வேதாந்தா நிறுவனம் சார்பில் 5 ம் நாள் வாதம் முன்வைக்கப்பட்டது.

* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடல் மட்டத்தில் இருந்து 16 முதல் 18 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

* 2006 ல் சோடியம் புளோரைட்டு, சோடியம் குளோரைட்டு, சல்பேட் என எந்த அமிலங்களின்
அளவும் அதிகரிக்கவில்லை என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம் ஆலையை மீண்டும் செயல்பட அனுமதி அளித்தது.

* ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 1.4 கிமீ தூரத்திற்கு பிறகே கடல் நீருடன் நிலத்தடி நீர் கலந்துள்ளது. இதற்கு எப்படி ஸ்டெர்லைட் ஆலையை காரணமாக குறிப்பிட முடியும்.

* ஆலையை சுற்றி கழிவு நீர் சுத்திகரிப்பு அனுமதிக்கப்பட்ட அளவு .001 அளவில் பாதிப்புகள் இருந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதிக்கப்பட்ட அளவு .05 உள்ளது.

* மத்திய அரசின் "நீரி" அமைப்பு அளித்த அறிக்கையில் ஆலையால் தண்ணீர் மாசுபாடு ஏற்படவில்லை என தெரிவித்தது. அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

* ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட அனைத்து முறையும் எந்த விதிமுறையும் பின்பற்றப்பட வில்லை. அடிப்படை ஆதாரமற்ற ஏதாவது ஒரு காரணத்திற்காக மூடப்பட்டது.

* 1994 முதல் தற்போது வரை ஸ்டெர்லைட் ஆலையால் எந்த மாசுபாடும் ஏற்படவில்லை.

* 1989 முதல் கடல் நீர் உட்புக ஆரம்பித்து விட்டது. ஆனால் அதன்பிறகு தொடங்கப்பட்ட ஆலையால் தான் கடல்நீர் உட்புகுந்ததாக கூறுவதை எப்படி ஏற்க முடியும்

* இப்படி 100க்கணக்காண உதாரணங்களை ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக சொல்ல முடியும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் தெரிவித்து தனது 5ம் நாள் வாதத்தை நிறைவு செய்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.