ETV Bharat / state

ஒரே நாளில் இருவேறு இடங்களில் மாதா சிலை உடைப்பு - இருவேறு இடங்களில் மாதா சிலை உடைப்பு

தண்டையார்பேட்டையில் இருவேறு இடங்களில் மாதா சிலை உடைக்கப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Statues of Mary vandalised
மாதா சிலை உடைப்பு
author img

By

Published : Jul 4, 2021, 11:26 PM IST

சென்னை: தண்டையார்பேட்டையில் உள்ள கருமாரியம்மன் நகர் பகுதியில் உள்ளது அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம். இங்கு வைக்கப்பட்டிருந்த சொரூபத்தின் சுற்றுப்புற கண்ணாடி உடைக்கப்பட்டு, அதனுள் இருந்த மாதா சிலையின் தலை, கையில் இருந்த குழந்தையின் தலை ஆகியவை உடைக்கப்பட்டிருந்ததை இன்று (ஜூலை.4) காலை அப்பகுதியினர் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மாதா சிலை உடைப்பு
மாதா சிலை உடைப்பு

இதைப்போலவே, கருமாரியம்மன் நகர் பகுதிக்கு அருகே உள்ள அம்மணி அம்மன் தோட்டம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபமும் சேதப்படுத்தப்பட்டிருந்து. தகவலறிந்து பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு உடனடியாக புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

சேதப்படுத்தப்பட்ட கண்ணாடி
சேதப்படுத்தப்பட்ட கண்ணாடி

ஆர்கே நகர் சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். சிலைகளை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். சிலைகள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பந்தப்பட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 1.13 லட்சம் இடங்கள்: வறுமைக்கோட்டுக்கீழ் உள்ள மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.