ETV Bharat / state

மாற்றுத் திறனாளிகள் செல்லும் வகையில் தாழ்தள பேருந்துகள் - டெண்டர் விட அனுமதி வேண்டி நீதிமன்றத்தில் கோரிக்கை - Alternative Disability Rights Act

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டர் நடவடிக்கைகளை துவங்க அனுமதிக்க வேண்டுமென தமிழக போக்குவரத்து துறை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் செல்லும் வகையில் தாழ்தள பேருந்துகள் டெண்டர் விட அனுமதி வேண்டி போக்குவரத்து துறை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை

author img

By

Published : May 3, 2022, 7:07 AM IST

சென்னை: கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016 ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டப்படி, "மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில், தமிழக போக்குவரத்து துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பாக சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் அடங்கிய தொழில்நுட்பக் குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்துக்கு 642 பேருந்துகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, அதில் 242 பேருந்துகள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்ய உள்ளோம். இது மொத்த கொள்முதலில் 37 சதவீதம். தொழில்நுட்ப குழு பரிந்துரைப்படி சென்னையில் உள்ள 956 பேருந்து நிறுத்தங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளது.

மேலும் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆறு மாதங்களில் பேருந்துகள் முழுமையாக கொள்முதல் செய்யப்படும்.மாற்றுத் திறனாளிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறோம். கரோனா ஊரடங்கு காரணமாக நிதி நெருக்கடி உள்ள போதும், இந்த பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இந்த டெண்டர் நடவடிக்கைகளை துவங்க அனுமதியளிக்க வேண்டும்” என பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"சின்னக் கலைவாணர் விவேக் சாலை"- முதலமைச்சருக்கு நடிகர் பூச்சி முருகன் நன்றி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.