ETV Bharat / state

மாநிலங்களவை வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

author img

By

Published : Mar 16, 2020, 10:34 AM IST

Updated : Mar 16, 2020, 10:47 AM IST

தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன.

State House nomination papers reviewed today
மாநிலங்களவை வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

தமிழ்நாட்டில் திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், முத்துகருப்பன், ஏ.கே. செல்வராஜ், ரங்கராஜன் உள்ளிட்ட ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இதையடுத்து அப்பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடக்கும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 6ஆம் தேதி தொடங்கி, 13ஆம் தேதி முடிவுற்றது. இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று செய்யப்படுகின்றது. இதில் 3 சுயேச்சைகளும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் சுயேச்சைகள் 3 பேரின் மனுக்களுக்கு குறைந்தது 10 எம்.எல்.ஏக்கள் முன் மொழிந்து கையெழுத்திட்டிருக்க வேண்டும். அந்த முன்மொழிவு கையொப்பம் 3 சுயேச்சைகளுக்கும் கிடைக்காததால், இன்று பரிசீலனை செய்யப்பட்டு, மூவரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படயிருக்கிறது.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற வரும் மார்ச் 18 ஆம் தேதி மாலை 3 மணி வரை இறுதி கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக, அதிமுக சார்பில் போட்டியிட்ட தலா 3 எம்.பிக்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

அதன்படி திமுகவின் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திருச்சி சிவாவும், அந்தியூர் செல்வராஜும், வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவும் அதிமுகவின் சார்பில் போட்டியிடும் கே.பி. முனுசாமியும் தம்பிதுரையும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜி.கே. வாசனும் மனுக்களைத் திரும்பப் பெறாமல் இருந்தால் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவது உறுதி.

இதைத்தொடர்ந்து மார்ச் 18ஆம் தேதி மாலை 6 பேருக்கும் தமிழ்நாட்டிற்கான மாநிலங்களவைத் தேர்தல் நடத்தும் அதிகாரியான சீனிவாசன், வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழை வழங்குவார்.

இதையும் படிங்க:

ராஜ்ய சபா தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல்

Last Updated : Mar 16, 2020, 10:47 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.