ETV Bharat / state

ரூ.17,141 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: இந்தமுறை தென்கோடி வரை... - etv bharat

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

author img

By

Published : Jul 20, 2021, 6:04 PM IST

Updated : Jul 20, 2021, 7:54 PM IST

சென்னை: கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' என்ற தொழில் முதலீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலமைச்சர் பல்வேறு புதிய தொழில் முதலீட்டுகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார்.

தொடர்ந்து, நிறுவனங்களின் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். ஏற்கெனவே ஒப்பந்தம் போடப்பட்ட நிறுவனங்களைத் தொடங்கிவைத்தார். குறிப்பாக ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் சுமார் 55 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

அதில் இன்று (ஜூலை 20) ஒன்று திட்டங்களுக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன் வாயிலாக ரூ.4,250 கோடி முதலீடு, 21,630 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஐந்து நிறுவனங்களின் வணிக உற்பத்தி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

வேலை கிடைக்கும் சூழல்

இதன்மூலமாக ரூ.7,117 கோடி முதலீடு, 6,798 பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இன்று உறுதிசெய்யப்பட்டுள்ள 49 திட்டங்களின் மூலமாக 28 ஆயிரத்து 508 கோடி ரூபாய் முதலீடு, 83 ஆயிரத்து 482 பேருக்கு வேலை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மோட்டார் தொழில்நுட்பம், வாகன உதிரிபாகங்கள், தொழில் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்பச் சேவைகள், ஜவுளி, மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வழக்கமாக சென்னை, காஞ்சிபுரம் அதனையொட்டியுள்ள பகுதிகளிலேயே புதிய தொழில் முதலீடுகள் வந்தன. இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் விழுப்புரம், திருவண்ணாமலை என்று தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில், இந்தத் திட்டங்கள் பரவலாக அமைய உள்ளன.

தொழிற்சாலைகளில் மகளிர்

இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "கரோனா தாக்கத்தின்போது மருத்துவ நெருக்கடியை மட்டுமல்ல நிதி நெருக்கடியையும் நாங்கள் எதிர்கொண்டோம். அரசின் சார்பில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்குத் தொழில் துறை சார்பில் 489.78 கோடி ரூபாய் நிதி திரண்டுள்ளது.

தெற்காசியாவிலேயே தொழில்புரிவதற்கு உகந்த மாநிலமாகத் தமிழ்நாட்டினை உயர்த்துவதே எங்களது லட்சியம். 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் உள்நாட்டு மொத்த உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக (GDP Economy) தமிழ்நாட்டினை உருவாக்குவதே, எங்கள் குறிக்கோள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யார் SEZ நிறுவனத்தின் தொழிற்சாலையைத் திறந்துவைத்தேன். தற்போது அந்நிறுவனத்தில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்துவருகிறார்கள். அதில் பெரும்பாலும் மகளிர் பணியாற்றிவருகிறார்கள்.

அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சி

இந்நிறுவனம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்திலும் சுமார் 6,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், ஒரு தொழில் திட்டம் தொடங்கிட இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை எனப் பரவலாகத் திட்டங்கள் அமையவுள்ளன.

இந்தப் பரவலான தொழில் வளர்ச்சியினால் அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சி காண்பதுடன், இளைய சமுதாயத்தினர் தங்கள் இல்லத்திற்கு அருகிலேயே வேலைவாய்ப்புகளைப் பெற்றிட முடியும்.

அரசின் இலக்கு

அனைவருக்கும் உயர்கல்வி, சமூக மேம்பாடு, தொழில் வளர்ச்சி ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் சீராக வளர வேண்டும் என்பதே அரசின் இலக்கு. மூன்றும் ஒன்றாக வளர்வதுதான் சீரான வளர்ச்சி.

இம்மூன்றும் தனித்தனியாக வளர்ந்துவிட முடியாது. ஒன்றின் வளர்ச்சிக்கு மற்றொன்று துணை செய்வதாக அமைய வேண்டும். அந்த வளர்ச்சிக்குத் தமிழ்நாட்டு தொழில் நிறுவனங்கள் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை?

Last Updated : Jul 20, 2021, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.