ETV Bharat / state

Senthil Balaji ED Raid: செந்தில் பாலாஜி அக்கவுண்ட்டில் என்ன இருக்கு? - விசாரணையில் இணைந்த ஸ்டேட் வங்கி

சென்னை மற்றும் கருரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று அதிகாலையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவரும் நிலையில் தற்போது பாரத் ஸ்டேட் வங்கியில் இருந்து அலுவலர்கள் அவர் இல்லத்திற்கு வரவைக்கப்பட்டுள்ளனர்.

state-bank-of-india-is-embroiled-in-an-investigation-with-minister-senthil-balaji
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வங்கிக்கனக்கு பற்றிய விசாரணையில் இனைந்துள்ளது பாரத் ஸ்டேட் வங்கி
author img

By

Published : Jun 13, 2023, 4:52 PM IST

சென்னை: தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூரில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் (ஜுன் 13) திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து அலுவலர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்திற்கு வரவைக்கப்பட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜியின் வங்கி பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு இருப்பதாகவும், அவ்வங்கியில் பணப்பரிவர்த்தைகள் செய்யப்பட்டு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அவரின் உறவினர்களுக்கு அந்த வங்கியில் கணக்கு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்கப் போவதாக கூறியுள்ளனர்.

இன்று காலை 8.30 மணியளவில், அமலாக்கத்துறை சோதனை குறித்த தகவல் கிடைத்ததும் நடைபயிற்சி சென்று இருந்த செந்தில் பாலாஜி அவசரமாக வீடு திரும்பினர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு தவிர்த்து அவரின் சகோதரர், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்தங்களுடைய 40 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செந்தில் பாலாஜியின் சகோதரர் கோகுல் மற்றும் அசோக் என்பவர் வீட்டிலும் நான்கு நாட்களாக சோதனையில் ஈடுப்படனர்.

Karur ED Raid: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

அந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் மற்றும், பண பரிவர்த்தனை தொடர்புடைய ஆவணங்களும் கைப்பற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது அபிராமிபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் என்பவர் இல்லத்திலும், அதே போல் அபிராமிபுரம் மூன்றாவது தெரு ஸ்ரீபதி என்டர்பிரைசஸ் உரிமையாளர் கோகுல் என்பவருக்கு சொந்தமான இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “அமலாக்கத் துறை சோதனை குறித்து சட்டப்படி எனக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. வருமான வரித்துறை சோதனையில் பறிமுதல் செய்த விவரங்கள் குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை சோதனை முடிந்த பிறகு முழு விவரம் தெரியவரும். அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்” என கூறியுள்ளார். இந்நிலையில் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: V Senthil Balaji: செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.