ETV Bharat / state

"அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்குக" பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை

author img

By

Published : Jun 3, 2022, 1:19 PM IST

Updated : Jun 3, 2022, 2:14 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Anbumani
அன்புமணி

சென்னை: இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் வரும் 13ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கப்படாதது கவலையளிக்கிறது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தாமதப்படுத்துவது, அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்.

மாணவர் சேர்க்கை தாமதம்: வழக்கமாக தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏப்ரல் மாத இறுதியிலோ, மே மாதத்தின் தொடக்கத்திலோ மாணவர் சேர்க்கை தொடங்கும். ஆனால் இந்தாண்டு மாணவர் சேர்க்கையை இன்னும் தொடங்காததற்காக காரணங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.

கடந்த ஓராண்டில் மட்டும் அரசு பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். தொழில் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் அரசு பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் விரும்பும் நிலையில், இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு மே மாதத் தொடக்கத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கியிருந்தால், நடப்பாண்டும் வழக்கத்தை விட கூடுதலாக பல லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பர்.

மாணவர் சேர்க்கை தொடங்காதது அபத்தச் செயல்: மொத்தமாக 669 அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் பயின்று வரும் நிலையில், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது. அதற்காக மாணவர் சேர்க்கையை முன்பே தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால், ஜுன் 13ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பதும், ஜூன் 14ஆம் தேதி மாணவர் சேர்க்கைப் பேரணியை நடத்த வேண்டும் என்று ஆணையிடுவதும் குதிரைகள் அனைத்தும் தப்பிச் சென்ற பிறகு லாயத்தை பூட்டுவதற்கு ஒப்பான அபத்தச் செயலாகும்.

எனவே கிராமப்புறங்களில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் வீடு வீடாகச் சென்று தகுதியுள்ள குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை ஒரு நடைமுறையாக கருதாமல், பெரும் இயக்கமாக மாற்றுவதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக 22 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்ற செய்தி ஈ டிவி பாரத் ஊடகத்தில் முதன்மையாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: First On:'தமிழ்நாட்டில் 22 பள்ளிகளில் ஒரு மாணவரும் கிடையாது... ஒற்றை இலக்க மாணவர்களைக்கொண்டு செயல்படும் 669 பள்ளிகள் - அதிர்ச்சி தகவல்!'

Last Updated : Jun 3, 2022, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.