ETV Bharat / state

'அது நாங்கள் இல்லை, நீங்கள்...' ஓபிஎஸ்ஸின் ஒற்றை கேள்விக்கு நீண்ட பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முதலமைச்சர்! - தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து ஒபிஎஸ் கேள்வி

காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசின் திட்டங்களை முடக்கப்பெயர் போன அரசு, முந்தைய அதிமுக அரசு என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்
author img

By

Published : Mar 23, 2022, 10:58 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், பெண்கல்வியை ஊக்குவிக்கவே தாலிக்குத்தங்கம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. எனவே, மீண்டும் அதை செயல்படுத்த அரசு பரிசீலிக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது எனப் பேசி, கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசு திட்டங்களை முடக்கப்பெயர் போன அரசு முந்தைய அதிமுக அரசு. ஓமந்தூரார் தோட்டத்தில் சட்டப்பேரவை திறக்கப்பட்டது.

1. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அதை மருத்துவமனையாக மாற்றியது யார்?

2. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பாழடிக்க முயற்சித்தது யார்?

3. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள கலைஞர் பெயரை நீக்கியது யார்?

4. கடற்கரை பூங்காவில் உள்ள கலைஞர் பெயரை அகற்றியது யார்?

5. கலைஞர் கொண்டு வந்த காரணத்தினால் சமத்துவபுரங்களை பாழடித்தது யார் ?

6. உழவர் சந்தைகளை மூடியது யார்?

7. நமக்கு நாமே அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை முடக்கியது யார்? எனப் பட்டியிலிட்டு, நல்ல திட்டம் எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்றும் ஆட்சி தான் இந்த ஆட்சி’ எனப் பதிலளித்தார்.

இதையும் படிங்க: குரூப் 2, 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது' - பழனிவேல் தியாகராஜன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.