ETV Bharat / state

கோயம்புத்தூரில் துணை ராணுவம் வரும் அளவிற்கு எந்த சம்பவமும் நடைபெறவில்லை - ஸ்டாலின் - Stalin has said that no incident has taken place in Coimbatore till the arrival of the paramilitary forces.

கோயம்புத்தூரில் துணை ராணுவம் வரும் அளவிற்கு எந்த சம்பவமும் நடைபெறவில்லை என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் துணை ராணுவம் வரும் அளவிற்கு எந்த சம்பவமும் நடைபெறவில்லை - ஸ்டாலின்

author img

By

Published : Feb 19, 2022, 10:31 AM IST

Updated : Feb 19, 2022, 12:43 PM IST

சென்னை பெருநகர மாநகராட்சி மன்றத் தேர்தலில் 122 வது வார்டு உறுப்பினரை தேர்வு செய்வதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐடிஇ கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாநகராட்சி 122 வது வார்டில் எனது வாக்கினை அளித்து உள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். சுயாட்சி அமைப்புகளின் மூலம் அரசின் திட்டங்கள், பணிகள் ஆற்ற முடியும். எனவே உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.

கோயம்புத்தூரில் துணை ராணுவம் வரும் அளவிற்கு எந்த சம்பவமும் நடைபெறவில்லை - ஸ்டாலின்

கோவையில் துணை ராணுவம் பாதுகாப்பு அளிக்கும் அளவுக்கு எந்தவித சம்பவமும் நடைபெறவில்லை.ஏற்கனவே உள்ளாட்சி அமைச்சராக இருந்தவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி அடையும்.

சட்டமன்றத் தேர்தலைவிட திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. ஒட்டுப் போட்ட மக்கள் மட்டுமல்ல, மற்றவர்கள் ஏன் வாங்களிக்கவில்லை என நினைக்கும் வகையில் வெற்றி வாய்ப்பு இருக்கும்.

நகைக்கடன் விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளனர். சில இடங்களில் பொட்டலங்களை மட்டும் வைத்து நகை கடன் பெற்றுள்ளனர்" என ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய்... காரணம் தெரியுமா?

Last Updated : Feb 19, 2022, 12:43 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.