ETV Bharat / state

ரூ.12.24 கோடி செலவில் புதிய கட்டடங்கள் - திறந்துவைத்த முதலமைச்சர் ஸ்டாலின் - Backward Welfare Department

ரூ.12.24 கோடி செலவில் பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவ மாணவியர்களுக்காக கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

12.24 கோடி செலவில் புதிய கட்டிடங்கள்- முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

author img

By

Published : Aug 10, 2023, 3:52 PM IST

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவ மாணவியருக்காக ரூ.12.24 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட்10) தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

ஓசூர், கடலூர், கோவில்பட்டி, தஞ்சாவூர்,மேலூர் ஆகியப் பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவ, மாணவியருக்காக 12 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டடங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசானது பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை உயர்த்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அம்மாணவ, மாணவியர்கள் இடை நிற்றல் இன்றி கல்வி கற்றிட கல்வி உதவித் தொகை வழங்குதல், புதிய பள்ளி மற்றும் விடுதிக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: யூடியூப் சேனல் நடத்துவதில் போட்டி: வாலிபரை கத்தி முனையில் கடத்திய கும்பல் - தருமபுரியில் நடந்தது என்ன?

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன் ரூ.3 கோடியே 69 இலட்சம், கடலூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன் ரூ.2 கோடியே 25 லட்சம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன் ரூ.2 கோடியே 7 லட்சம், தஞ்சாவூரில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன் ரூ.2 கோடியே 12 லட்சம், மதுரை மாவட்டம் மேலூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன் ரூ.2 கோடியே 11 லட்சம் என மொத்தம் 12 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடங்களை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும் நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா,பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் திருமதி. ரீட்டா ஹரீஷ் தக்கர், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் திரு. அனில் மேஷ்ராம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் வா. சம்பத், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்புச் செயலாளர் திரு. ஹனீஷ் சாப்ரா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இடிந்து விழும் நிலையில் நூலகக் கட்டடம்: பெஞ்ச், கழிப்பிட வசதி கூட இல்லை - வாசகர்கள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.