தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், " வேல் யாத்திரை திருத்தணியில் நவம்பர் 6ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, முருகனுடைய அறுபடை வீடுகளுக்கும் சென்று டிசம்பர் 6 திருச்செந்தூரில் முடிய உள்ளது. கடைசி நாளன்று ஜேபி நட்டாவை கலந்துகொள்ள கோரிக்கை விடுத்துள்ளோம்.
கறுப்பர் கூட்டம் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பது இந்த யாத்திரை மூலம் கொண்டுவர நினைக்கிறோம். ஸ்டாலின் வேல் யாத்திரைக்கு பயந்து அவர் பின்னால் இருக்கும் நபர்களை வைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இளைஞர்கள், பெண்கள் எங்கள் பின்னால் வருகின்றனர். அதற்கு பயந்து இந்த யாத்திரையை நடக்கவிடாமல் தடுக்கின்றனர். யார் இந்த யாத்திரை கலவரமாக மாறும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள்தான் இந்த யாத்திரையில் கலவரம் செய்ய முன் வருவார்கள், அவர்கள் மீது காவல்துறை, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஜினி அரசியலுக்கு வந்தால் பாஜக வரவேற்கும்” என்றார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு நாள் கொண்டாட அனுமதி மறுப்பு; பாஜக வேல் யாத்திரைக்கு மட்டும் அனுமதியா? - கொளத்தூர் மணி கேள்வி