ETV Bharat / state

விளம்பரப் பலகை விழுந்து பெண் உயிரிழப்பு - ஸ்டாலின் இரங்கல் - பேனர் விழுந்து இறந்து பெண்ணுக்கு ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பள்ளிக்கரணையில் அதிமுகவினரின் விளம்பரப் பலகை (பேனர்) விழுந்து உயிரிழந்த இளம்பெண்ணுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

MK Stalin
author img

By

Published : Sep 13, 2019, 10:57 AM IST

Updated : Sep 13, 2019, 6:50 PM IST

சென்னை பள்ளிக்கரணை பகுதி சாலையில் அதிமுகவினர் வைத்த பேனர் நேற்று சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது சரிந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது நொடிப்பொழுதில் லாரியின் சக்கரம் ஏறியது. இந்த விபத்தில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதிமுக பேனர் வைத்ததற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், "அரசின் அலட்சியம், அலுவலர்களின் பொறுப்பின்மை, காவல் துறையினரின் கையாலாகாதத்தனமென, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகையானது சுபஸ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கியிருக்கிறது. அவருக்கு என் இரங்கல்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும், அவர், அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? எனவும் ஆவேசமாக கேள்வியெழுப்பினார்.

சென்னை உயர் நீதிமன்றம் சாலைகளில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைக்க ஏற்கனவே தடைவிதித்திருந்தது. அதனை ஆளும்கட்சி உள்ளிட்ட பல முக்கிய கட்சிகள் மீறிவருவது வாடிக்கையாகிவருகிறது.

இதுபோன்று அனுமதியின்றி பேனர், விளம்பரப் பலகை வைக்கக் கூடாது என டிராபிக் ராமசாமி உள்ளிட்ட பல சமூக செயற்பாட்டாளர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வழக்கும் தொடுத்துவருகின்றனர். ஆனால், பேனர் கலாசாரம் ஒழிந்தபாடில்லை.

Last Updated : Sep 13, 2019, 6:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.