ETV Bharat / state

மளிகை பொருட்களைத் திருடிய இலங்கை குருவிகள் கைது!

author img

By

Published : Nov 11, 2019, 10:06 PM IST

சென்னை: ஆவடியில் ஆர்.எம்.கே மளிகை அங்காடியில் பொருட்களைத் திருடியதாக இலங்கை நபர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மளிகை பொருட்களைத் திருடிய இலங்கை குருவிகள் கைது

சென்னை மாவட்டம் ஆவடி பகுதியில் இயங்கி வருகிறது ஆர்.எம்.கே மளிகை அங்காடி. இங்கு திருட முயன்ற இரண்டு நபர்களைக் கடையின் உரிமையாளர் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். இந்த தகவலறிந்து விரைந்த சென்ற காவல் துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் முகமது தாஜுதீன் (44), சிக்கந்தர் பாஷா (60) ஆகிய இருவரும் இலங்கை நாட்டைச் சேர்ந்த குருவிகள் என்பது தெரியவந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, குருவிகளாகச் சென்னைக்கு வந்த இவர்களின் விசா, கடவுச்சீட்டு காலாவதியானதால் சென்னையில் தங்கியுள்ளனர். இவர்களின் புகைப்பட அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றைத் தொலைத்து விட்டதாவதாகவும் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்தனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை பகுதியில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்திய உளவுத்துறை மற்றும் குடியேற்றம் அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில், இருவர் மீதும் எந்த குற்ற வழக்கும் இல்லை என்பதால், சொந்த நாடான இலங்கைக்கு நாளை அனுப்பப்படவுள்ளனர்.

இதையும் படிங்க: சிசிடிவியை உடைத்து நகை, பணம், ஐஃபோன் கொள்ளை: பலே ஆசாமிகள் கைவரிசை!

Intro:ஆவடியில் மளிகை கடையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை குருவிகள் இருவர் கைது.
Body:ஆவடியில் மளிகை கடையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை குருவிகள் இருவர் கைது.

சென்னை ஆவடியில் ஆர். எம். கே மளிகை அங்காடியில் மளிகை பொருட்களை திருடியதாக ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆய்வாளர்கள் காளிராஜன் மற்றும் பிரவீன் டானி அங்கு பிடித்து வைத்திருந்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் முகமது தாஜுதீன் 44, சிக்கந்தர் பாஷா,60 ஆகிய இருவரும் ஸ்ரீலங்கா நாட்டைச் சேர்ந்த குருவிகள் என்பது தெரியவந்தது.

இருவரும் கடந்த 2 வருடத்துக்கு முன் குருவிகளாக சென்னை வந்த நிலையில் தங்களுடைய விசா பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் சென்னையில் தங்கிவிட்டனர்.

இவர்களை விசாரித்ததில் புகைப்பட அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை தொலைத்து விட்டதாவகவும் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்தனர்.

பின்னர் சென்னை ஸ்டாண்லி மருத்துவமனை மற்றும் அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனை பகுதியில் தங்கியுள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து இந்திய உளவுத்துறை மற்றும் குடியேற்றம் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதிகாரிகள் விசாரணையில் இவர்கள் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்பது
தெரியவந்தது நாளை இவர்கள் சொந்த ஊரான இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.