சென்னை: இதுதொடர்பாக தமிழ்நாடு உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை அனைவரும் அவரவர் காவல் எல்லையில் இரவு நேரத்தில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இவை தவிர சிறப்பு பாதுகாப்பு பணி, நுண்ணறிவு பணி, குற்றப்பிரிவு, புலன் விசாரணை, காவல் கட்டுப்பாட்டு பணி மற்றும் தொழிற்நுட்ப பணிகள் ஆகியவற்றை காவலர்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் டிஜிபி பரிந்துரைப்படி சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு பணி என பல்வேறு நிலைகளில் இரவு பணி மேற்கொள்ளும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான அலுவலர்கள், மாதத்திற்கு 6 முதல் 10 நாட்கள் இரவு பணி மேற்கொள்கின்றனர்.
அவர்களுடன் ஆயுதப்படை, சிறப்பு காவல் படையினரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இரவு பணிக்குக் செல்லும் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இரவு ரோந்து பணிக்கு செல்லும் அனைத்து இரண்டாம் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான அலுவலர்களுக்கு சிறப்பு படியாக மாதம் ரூ.300 வழங்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு 42 கோடியே 22,800 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யார் இந்த போலீஸ் அக்கா...? கல்லூரி மாணவிகளுக்கு புதிய திட்டம்..! கோவை போலீசாரின் அசத்தல்..!