சட்டப்பேரவையில் கரோனா குறித்த விழிப்புணர்வு, மருத்துவர்களுக்கு நிவாரணம் பற்றிய குறிப்பை முதலமைச்சர் அறிவித்தார்.
முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் கூறியதாவது:
- கரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பூதியமாக வழங்கப்படும்.
- இன்று மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகள் அடைக்கப்பட உள்ளதால் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
- அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வரலாம்.
- நோய் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும்.
- வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் முழு பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு நோய் பரவுவதைத் தடுக்க முடியும்.
- கரோனா கண்டறிதல் சோதனையில் பெருந்தொற்று தென்பட்டால் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.
- பாதிக்கப்பட்டவர்கள் அச்சமடையத் தேவையில்லை தனிமைப்படுத்தப்பட்ட அறை, தனி மருத்துவர் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும்.
- 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையை அரசு உருவாக்கியுள்ளது.
- வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் மக்கள் செயல்பட வேண்டும்.
- சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்காலத்தில் மறைந்தால் நிதி உதவி 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக வழங்கப்படும்.
இதையும் படிங்க: கரோனா நிவரணம்: முதலமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!