ETV Bharat / state

நடிகர் சங்க தனி அலுவலர் விவகாரம்: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!

சென்னை: நடிகர் சங்கத்திற்கு தனி அலுவலராக கீதா நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம்
actor-association
author img

By

Published : Nov 26, 2019, 8:49 PM IST

நடிகர் சங்கம் தொடர்பான இரு வழக்குகள் இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. நடிகர் சங்கம் தரப்பில், நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தனி அலுவலராக கீதாவை நியமித்தது சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது.

மேலும், 3 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட நடிகர் சங்கத்தில் வெறும் 3 உறுப்பினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தனி அலுவலரை நியமித்தது தவறானது எனவும் நடிகர் கார்த்தி தரப்பில் வாதிடப்பட்டது.

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியே பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், நடிகர் சங்க தலைவராக இருந்த நாசர், பொருளாராக இருந்த கார்த்தி, சிறப்பு அலுவலர் நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்த இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தமிழ்நாடு வணிக வரித்துறை செயலாளர், பதிவுத்துறை ஐஜி, தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், நிலுவையில் உள்ள நடிகர் சங்கத் தேர்தல் வழக்குகளில் முடிவு எட்டும் வரையோ அல்லது ஓர் ஆண்டிற்கு மட்டுமே தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க... உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

Intro:Body:நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியாக கீதா நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.

நடிகர் சங்க நிர்வாக பணிகளை கவனிக்க பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதா நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம் மற்றும் பொருளாளர் நடிகர் கார்த்தி ஆகியோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. நடிகர் சங்கம் தரப்பில், நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தனி அதிகாரியாக கீதாவை நியமித்தது சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது.

மேலும், 3000 உறுப்பினர்கள் கொண்ட நடிகர் சங்கத்தில் வெறும் 3 உறுப்பினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தனி அதிகாரியை நியமித்தது தவறானது எனவும் நடிகர் கார்த்தி தரப்பில் வாதிடப்பட்டது.

கடந்த ஏப்ரல் 18 ம் தேதியே பதவிக் காலம் முடிவடைந்த நிலையில்,நடிகர் சங்க தலைவராக இருந்த நாசர், பொருளாராக இருந்த கார்த்தி, சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்த இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தமிழக வணிக வரித்துறை செயலாளர், பதிவுத்துறை ஐஜி, தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், நிலுவையில் உள்ள நடிகர் சங்க தேர்தல் வழக்குகளில் முடிவு எட்டும் வரையோ அல்லது ஓர் ஆண்டிற்கு மட்டுமே தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்திருந்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.