ETV Bharat / state

குற்றச்செயல்கள் தடுப்பு சட்ட வரைவு மசோதா: சட்ட முன் வடிவை இயற்ற அறிவுரை - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்கும் வகையில், இயற்றப்பட்டுள்ள வரைவு சட்ட முன் வடிவு விரைந்து இயற்றப்பட்டால் காவல் துறையினருக்கு உதவியாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

MHC
MHC
author img

By

Published : Sep 28, 2021, 4:52 PM IST

Updated : Sep 28, 2021, 6:12 PM IST

சென்னை அயனாவரத்தில் இரு ரவுடி கும்பலுக்கு இடையில் நடந்த மோதலில், ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வேலு என்பவர், தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.

ரவுடிகள், அரசியல்வாதிகள் என எல்லோரிடமும் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகவும் ரவுடிகளால் காவல்துறையினர் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் கவலை தெரிவித்திருந்த நீதிமன்றம், ரவுடிகளையும் சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

ரவுடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய சட்ட முன் வடிவு தயாரிக்கப்பட்டு உள்துறை கூடுதல் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்துசட்ட முன் வடிவை சட்டமன்றத்தில் வைத்து புதிய சட்டம் எப்போது இயற்றப்படும் என்பது குறித்து பதிலளிக்க தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு (கிருபாகரன் ஓய்வு வரை) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, "திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு சட்டம்" என்ற பெயரில் வரைவு மசோதா தயாராக உள்ளதாகவும் அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு சட்ட வரைவு மசோதா தயாராக இருப்பதாக தெரிவித்ததற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இது சட்டமாக இயற்றப்பட்டால் ரவுடிகளை கட்டுப்படுத்த காவல் துறையினருக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: உடனடியாக மதிய உணவுத் திட்டத்தை தொடங்க உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம்

Last Updated : Sep 28, 2021, 6:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.