ETV Bharat / state

'தென்மேற்கு பருவமழை தாமதம்' - வானிலை ஆய்வு மையம் - தென்மேற்கு பருவமழை தாமதம்

சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில்தான் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது .

சென்னை வானிலை ஆய்வுமையம்
author img

By

Published : May 26, 2019, 4:19 PM IST

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு மிகத் தாமதமாக தொடங்குவதால், தமிழ்நாட்டில் ஜூன் 2 வாரத்த்தில் தான் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக சுமார் 30 - 40 கி.மீ வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், தற்போது மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்தவரை நேற்றை விட இன்று, 2 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பம் நிலவக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 37 டிகிரியும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரியும் இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

சென்னைக்கு மழை வருமா? வராதா? ஏக்கத்தில் இருக்கும் நகரவாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்

தென்மேற்கு பருவமழை இந்த வருடம் மிகத் தாமதமாக கேரளத்தில் துவங்குவதால், தமிழகத்திலும் ஜூன் மாதம் 2 வாரத்த்தில் தான் மழை பொழியத் துவங்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் .

 வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 30 - 40 கீ. மீ வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று முதல் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது . கன்னியாகுமரி , விருதுநகர், தேனி, நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது. 

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை. நேற்றை விட இன்று, 2 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பம் நிலவக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகும்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.