சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து அவரர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், பண்டிகை காலங்களில் வழக்கமாக இயக்கும் ரயில்களை விட, சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே மூலம் இயக்கபட்டு வருகிறது.
இந்நிலையில், நவம்பர் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், சந்த்ராகாச்சி, புவனேஷ், புவனேஸ்வர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் தெரிவித்திருப்பதாவது: “தீபாவளி பண்டிகையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கபடுகின்றன. இதில் தாம்பரம் - நாகர்கோவில் - மங்களுரூ - தாம்பரம் என வாரந்திர ரயில் இயக்கபடுகின்றன.
அதில், தாம்பரம் - நாகர்கோவில் (06061) இடையே 10,17,24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில் மட்டும்) தாம்பரத்தில் இருந்து மாலை 7.30 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை திருநெல்வேலி வழியாக மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
இதேபோல், இந்த ரயில் அடுத்த மார்கமாக நாகர்கோவில் - மங்களூர் (06062) இடையே 11,18,25 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில் மட்டும்) இயக்கப்படும். இந்த ரயிலானது, நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.45-க்கு புறப்பட்டு திருவனந்தபுரம், கொல்லம், திருவல்லா, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் வழியாக மறுநாள் காலை 5.15 மணிக்கு மங்களூருக்கு சென்றடையும்.
மீண்டும் இந்த ரயிலானது, மங்களூரு - தாம்பரம் (06063) இடையே நவம்பர் 12,19,26 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்) மங்களூருவில் காலை 10 மணிக்கு புறப்பட்டு கண்ணூர், தலச்சேரி, பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, சென்னை எழும்பூர் வழியாக தாம்பரத்திற்கு மறுநாள் காலை 5.10 வந்தடையும்” என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த ரயிலில், 1 - இரண்டாம் ஏ.சி வகுப்பு, 6 - மூன்றாம் ஏ.சி வகுப்பு, 9 - படுக்கை வகுப்பு, 2 - ஜெனரல் வகுப்பு, 2 - மாற்றுத்திறனாளி சிறப்பு வகுப்பு என 20 பெட்டிகள் உள்ளன.
சிறப்பு வந்தே பாரத்: சென்னை - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தேபாரத் ரயிலானது, வாரத்தில் வியாழக்கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இயக்கபட்டு வருகின்றன. மேலும், தீபாவளிக்காக 9-ஆம் தேதி மட்டும் (வியாழக்கிழமை) வந்தேபாரத் ரயிலானது இரு மார்க்கத்திலும் இயக்கபடும். இதற்கான முன்பதிவும் தொடங்கி உள்ளது என்றும் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கபட்டு உள்ளது.
திருநெல்வேலி - சென்னை இடையே: மேலும் திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலானது திருநெல்வேலியில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு மறுநாள் மதியம் 3 மணிக்கு வந்தடையும்.
சிறப்பு ரயில்கள்: சென்னை - நாகர்கோவில் - சென்னை (11 சேவைகள்), சென்னை - திருநெல்வேலி - சென்னை (8 சேவைகள்), கொச்சுவேலி - எஸ்எம்விடி - கொச்சுவேலி (4 சேவைகள்), சென்னை - சாந்த்ராகாச்சி - சென்னை (6 சேவைகள்), சென்னை - புவனேஷ்வர் - சென்னை (6 சேவைகள்), நாகர்கோவில் - எஸ்எம்விடி - நாகர்கோவில் (6 சேவைகள்), எர்ணாகுளம் - தன்பாத் (1 சேவை), நாகர்கோவில் - மங்களூரு (3 சேவைகள்), மங்களூரு - நாகர்கோவில் (3 சேவைகள்), சென்னை - மங்களூரு - சென்னை (6 சேவைகள்), திருநெல்வேலி - சென்னை (6 சேவைகள்) என 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: