ETV Bharat / state

உடல்நலம் தேறி வரும் சிவசங்கர் பாபா - Sources says sivasanbar baba will be discharged today or tomorrow

சிவசங்கர் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதால், இன்று(ஜூன்.25) அல்லது நாளை மீண்டும் சிறையில் அடைக்க சிபிசிஐடி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

சிவசங்கர் பாபா
sivasanbar baba
author img

By

Published : Jun 25, 2021, 12:39 PM IST

சென்னை கேளம்பாக்கம் பகுதியில், சுஷில் ஹரி உண்டு - உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இதன் நிறுவனரான சிவசங்கர் பாபா அப்பள்ளியில் பயின்ற மாணவிகளிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத்தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சிவசங்கர் பாபாவுக்கு ஜூலை 1ஆம் தேதி வரை நீதிமன்றம் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, அவர் கடந்த சில நாட்களாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல்நிலையில் முன்னேற்றம்

இந்நிலையில் சிவசங்கர் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதால் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தலையில் சிறுகட்டி இருப்பதாகவும், அதை மருந்து மூலமே குணமாக்கிவிடலாம் என சிபிசிஐடி போலீசாருக்கு மருத்துவ நிர்வாக தரப்பில் அறிக்கை அனுப்ப உள்ளதாக தெரிகிறது.

போலீஸ் காவல்?

ஏற்கெனவே சிவசங்கர் பாபாவை விசாரிக்க 10 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், சிவசங்கர்பாபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது போலீஸ் காவலுக்கு அனுப்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இதையும் படிங்க: மநீமவின் அடுத்த மூவ்: நிர்வாகிகளுடன் உரையாடுகிறார் கமல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.