சென்னை : இயக்குநரும், குணசித்திர நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 56. சீரியல் டப்பிங்கின் போது மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் மாரிமுத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
நடிகர், இயக்குநர் மாரிமுத்து காலமானார் எனத் தகவல்!#etvbharat #etvbharattamil #marimuthu #actormarimuth #RIP pic.twitter.com/qrDM6COKMA
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">நடிகர், இயக்குநர் மாரிமுத்து காலமானார் எனத் தகவல்!#etvbharat #etvbharattamil #marimuthu #actormarimuth #RIP pic.twitter.com/qrDM6COKMA
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) September 8, 2023நடிகர், இயக்குநர் மாரிமுத்து காலமானார் எனத் தகவல்!#etvbharat #etvbharattamil #marimuthu #actormarimuth #RIP pic.twitter.com/qrDM6COKMA
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) September 8, 2023
சீரியல் டப்பிங்கின் போது, மாரிமுத்துவுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், உடன் பணியாற்றுபவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனியார் தொலைக்காட்சியில் அவர் நடித்துக் கொண்டு இருந்த சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து தான் நடித்த எதிர்நீச்சல் டி.வி சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று ஏற்பட்ட ஹார்ட் அட்டாக் காரணமாக உயிரிழந்தார். மறைந்த நடிகர் மாரிமுத்து தனது ஆரம்ப காலங்களில் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.
பிறகு டைரக்டர் வசந்திடம் சில படங்கள் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு பிறகு இயக்குநராகி 'கண்ணும் கண்ணும்' 'புலிவால்' ஆகிய இரண்டு படங்களை இயக்கினார். அதன் பிறகு நடிகர் ஆகி பிசியான குணசித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ள நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று (செப். 8) மாலை வரை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் மதுரை கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வரசநாடு அடுத்து உள்ள கிராமத்திற்கு நடிகர் மாரிமுத்துவின் உடல் கொண்டு செல்லப்பட்டு நாளை (செப். 9) அங்கு இறுதிச் சடங்குகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : சனாதன சர்ச்சை: "உதயநிதிக்கு உரிமை உண்டு... உடன்பாடு இல்லையா வாதம் செய்யுங்க.. அரசியல் செய்யாதீங்க" - கமல்ஹாசன்!