சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் பொருள்கள் கண்காட்சிக்கு வரும்பொது மக்களுக்கு, காவலன் செயலி குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொதுமக்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் குழந்தைகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
மேலும் சீதாராமன் குழந்தைகளுக்கு காவலன் காப்பு (Anti-Lost Band) கையில் அணிவித்தார். தொடர்ந்து குழந்தைகள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், ஆபத்தான நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் ஆகியவை குறித்து விளக்கமளித்தார்.
இதையும் படிங்க:
#EXCLUSIVE ப.சிதம்பரத்துடன் பொருளாதாரம் குறித்த பிரத்யேக நேர்காணல்!