ETV Bharat / state

'ஸ்மார்ட் சிட்டி விவகாரம்;  விரைவில் விசாரணைக் குழு அமைக்கப்படும்'

author img

By

Published : Jan 6, 2022, 7:06 PM IST

ஸ்மார்ட் சிட்டி அமைத்தது தொடர்பாக விரைவில் விசாரணைக் குழு அமைக்கப்படும் எனப் பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வடிகால் சீரமைப்புப் பணிகளை அன்றைய அதிமுக அரசு செய்தது.

கடந்த ஐந்து மாத ஆட்சியில் வடிகால்களைத் தூர்வாரி இருந்தால் சென்னையில் இவ்வளவு பெரிய பெருவெள்ளம் ஏற்பட்டு இருக்காது" என்றார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, "2700 கிலோ மீட்டர் சென்னையில் உள்ளது, 700 கிலோ மீட்டர் ஆகாயத் தாமரைகளை அகற்றியதால்தான் வெள்ளம் ஏற்பட்டாலும் நீர் வடியத் தொடங்கியது.

கொசஸ்தலை ஆற்றை முழுமையாகத் தூர்வாரவில்லை. முறையாகத் தூர்வாராததால்தான் இவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "ஸ்மார்ட் சிட்டி என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டு தி நகரில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நான் ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது மாம்பலம் கால்வாய் முறையாகத் தூர்வாரப்பட்டதால் தி நகரில் பல ஆண்டுகளாக நீர் நிற்கவில்லை. ஆனால் தற்போது பெய்த மழையால் நீர் வடியவில்லை காரணம் ஸ்மார்ட் சிட்டிதான்.

ஸ்மார்ட் சிட்டி அமைத்து தொடர்பாக விரைவில் விசாரணைக் குழு அமைக்கப்போகிறோம்" என்றார்.

நீட் தேர்வு தொடர்பான திட்டங்கள்

நீட் தேர்வை ரத்துசெய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு செய்துவருவதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், இருப்பினும் மத்திய அரசு எந்தவிதப் பதிலும் அளிக்காமல் தாமதம் செய்துவருகிறது என்றார். மேலும் நீட் தேர்வுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ள அனைத்து கட்சித் தலைவர்களிடமும் கோரிக்கைவைத்தார் ஸ்டாலின்.

குடியரசுத் தலைவருக்கு அனுப்ப இருக்கும் மனுவில் ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறித்துவிட்டதாகக் கூறினார்.

இதையும் படிங்க: பிரதமர் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு; நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.