ETV Bharat / state

'மக்களுக்கு சிறு கடனை குறைந்த வட்டியில் வழங்க வேண்டும்' - ராமதாஸ் கோரிக்கை

author img

By

Published : May 24, 2020, 3:46 PM IST

சென்னை: வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு ஓராண்டில் திருப்பிச் செலுத்தும் வகையில், அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்தை சிறு கடனாக குறைந்த வட்டியில் வழங்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ramadoss
ramadoss

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு விதிகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பொருளாதார நெருக்கடி பெரும் சுமையாக உருவெடுத்துள்ளது. கடன் வாங்கியாவது நெருக்கடியைச் சமாளிக்கலாம் என்று நினைக்கும் மக்களுக்கு, அதற்கான வட்டி பெரும் தண்டனையாக அமைந்துள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். அரசு சார்பில் பெரிய அளவில் நிதியுதவி வழங்க முடியாத சூழலில் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடனாவது கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மற்றொருபுறம் கடன் வாங்க ஆளில்லாத நிலையில் பொதுத்துறை வங்கிகள் தங்களிடம் இருந்த பணத்தில் ரூ.10 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கியில் வைப்பீடு செய்துள்ளன.

இது வங்கிகளுக்கு இழப்பையே ஏற்படுத்தும். கடன் விதிகளை சற்று தளர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வங்கிகள் அதிக அளவில் கடன் கொடுத்தால் அனைத்துத் தரப்பினரும் பயனடைவார்கள்.

பொதுத்துறை வங்கிகளில் நகைக்கடன் பெற விரும்புவோருக்கு வங்கிக் கணக்கு இல்லை என்றால் உடனடியாக புதியக் கணக்கு தொடங்கி, சில மணி நேரங்களில் நகைக்கடன் வழங்க வேண்டும். அதேபோல், வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு ஓராண்டில் திருப்பி செலுத்தும் வகையில், அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்தை சிறு கடனாக குறைந்த வட்டியில் வழங்க வேண்டும்.

இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் ஊக்குவிப்பாக அமையும் என்பதால் இதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் செயல்படுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சிறு, குறு நிறுவனங்களுக்கு லோன் வழங்கும் பேங்க் ஆப் பரோடா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.