ETV Bharat / state

100ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் தோழர் சங்கரய்யா

தோழர் சங்கரய்யா நாளை நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கல்வெட்டுத் திறப்பு, கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

100ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் தோழர் சங்கரய்யா
100ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் தோழர் சங்கரய்யா
author img

By

Published : Jul 14, 2021, 10:52 PM IST

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என். சங்கரய்யா நாளை ( ஜூலை 15) 100ஆவது பிறந்தநளைக் கொண்டாடுகிறார்.

இதை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முழுவதும் கொடியேற்று நிகழ்வு, கொண்டாட்ட நிகழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

சீத்தாராம் யெச்சூரி
சீத்தாராம் யெச்சூரி

அதன்படி, நாளை காலை 8.15 மணிக்கு, சென்னை, குரோம்பேட்டை அஞ்சலகம் அருகில், கல்வெட்டுத் திறப்பு, கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு கல்வெட்டைத் திறந்துவைத்து கொடியேற்றுகிறார்.

நாளை காலை 8.30 மணிக்கு, பல்லவபுரம் நகராட்சி அலுவலகம் அருகில் கல்வெட்டுத் திறப்பு, கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு கல்வெட்டைத் திறந்துவைத்து கொடியேற்றுகிறார்.

என். சங்கரய்யா இல்லத்தில் நாளை காலை 8.45 மணிக்கு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு கொடியேற்றி உரையாற்றுகிறார்.

இதையும் படிங்க: வரும் காலம் பாஜகவின் காலம் - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.