சென்னை: சீர்காழியை சேர்ந்த அபிநயாவிற்கு கால்கள் எடுக்காமலேயே சென்னை மருத்துவக்கல்லூரியின் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சையின் மூலம் சரிசெய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் இன்று (பிப்.14) எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளார்.
கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி அபிநயா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமீபத்தில் தனக்கு உதவி செய்யக் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து உடனடியாக முதலமைச்சரின் உத்தரவின்பேரில் மாணவியை சென்னையிலுள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை நடந்து வந்தது. இந்நிலையில், சிகிச்சைக்குப் பிறகு மாணவி அபிநயா தனது கால்களை இழக்காமலேயே குணமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் நன்றாக நடக்கவும் ஆரம்பித்துள்ளார்.
சீர்காழியைச் சேர்ந்த அபிநயா என்கிற குழந்தைக்கு SLE (Systemic lupus erythematosus is a Rare Disease) என்னும் அரிய வகை நோய்ப் பாதிப்பால் இரு கால்களையும் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். சமூக வலைதளத்தின் மூலம் இந்தச் செய்தியை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் சீரிய வழிகாட்டுதலின்படி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கால்களை எடுக்காமலேயே சிறப்பான சிகிச்சையின் மூலம் அக்குழந்தை நடக்க ஆரம்பித்துள்ளார்.
கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி ஒருவர் டிசம்பர் 20-ம் தேதி தனக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையறிந்த முதலமைச்சரின் உத்தரவின்பேரில், உடனடியாக அம்மாணவி சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்கு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: CM-க்கு கோரிக்கை விடுத்த மாணவி; உடனடியாக சென்னை மருத்துவமனையில் அனுமதி