ETV Bharat / state

வெளியானது 'பத்து தல' - சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்! - கௌதம் கார்த்திக் பிரியா பவானி சங்கர்

சிம்பு நடிப்பில் உருவாகிய பத்து தல படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

simbu fans celebrates pathu thala movie release in chennai rohini theatresimbu fans celebrates pathu thala movie release in chennai rohini theatre
வெளியானது பத்து தல - சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்!
author img

By

Published : Mar 30, 2023, 12:06 PM IST

Updated : Mar 30, 2023, 1:24 PM IST

வெளியானது 'பத்து தல' - சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்!

சென்னை: நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகத் திறமையோடு, தமிழ் திரைத்துறையில் வலம் வருபவர் நடிகர் சிம்பு. சிறு வயது முதல் திரையுலகில் தனது நடிப்பாலும், பன்முக திறமையாலும் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக விளக்குபவர். ஆனால், சமீப காலமாகச் சிம்பு உடல் எடை அதிகரித்து, பல்வேறு பிரச்சனைகளால் தயாரிப்பாளர் மத்தியில், இவர் மீது அதிருப்தி ஏற்பட்டு இருந்தது.

அதன் பின், அனைத்தையும் கடந்து உடல் எடையைக் குறைத்த சிம்பு மீண்டும் திரையுலகில் கம் பேக் கொடுத்தார். அதன் பின், இவரது நடிப்பில் 2021-ல் வெளிவந்த அறிவியல் புனைகதையான மாநாடு திரைப்படம், திரையுலகில் இவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. மேலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான அப்படம் மிகப் பெரிய வெற்றியைத் தேடித்தந்தது.

அதனை தொடர்ந்து, கௌதம் மேனன் இயக்கத்தில், வெந்து தணிந்தது காடு படம் வெளியானது. உடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியான தேகத்துடன் காணப்பட்ட சிம்புவை பார்த்து திரையுலகமே திகைத்துப்போனது. ஆனால், இப்படம் பெருமளவு வெற்றியைப் பெறவில்லை. மேலும், இதனைத் தொடர்ந்து சிம்பு, ஹன்சிகாவின் மகா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அது நீண்ட நாட்களாக வெளியாகாமலிருந்தது.

இந்த நிலையில், கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மஃப்டி படத்தின் ரீமேக்கான பத்து தல படத்தில் சிம்பு நடித்தார். இவருடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்துக்கு, ஏஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘பத்து தல’ படத்திற்கான அறிவிப்பு வந்த நாள் முதலே, இந்த படத்திற்கான மிகப் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.

மேலும், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சில கடினமான சம்பவங்களை எண்ணி, இனி சோக காட்சிகள் எல்லாம் முடிந்து விட்டது என்றும் எனது ரசிகர்கள் ஆகிய நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எமோஷனலாக பேசினார். தொட்டி ஜெயா படத்துக்குப் பிறகு, இந்த படத்தில் சிம்பு கருப்பு கலர் சட்டையில் நீண்ட தாடியுடன் நடித்துள்ளார். அதிக எதிர்பார்ப்பை உருவாக்கிய இப்படம், இன்று(மார்ச் 30) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதனால், காலை முதலே சிம்பு ரசிகர்கள் பல்வேறு விதமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ரோகிணி திரையரங்கில் கூடிய ரசிகர்கள், பட்டாசு வெடித்தும் தேங்காய் உடைத்தும் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனால், ரசிகர்கள் பெருமளவு கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் பாடல்கள் மக்கள் மனதில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: Ponniyin Selvan 2: இசை வெளியீட்டு விழாவில் ஷாக் கொடுத்த அமைச்சர் துரைமுருகன்.. சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் கூறியது என்ன?

Last Updated : Mar 30, 2023, 1:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.