சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உலக விளையாட்டு சங்கம் மற்றும் பல்லாவரம் விளையாட்டு கழகம் இணைந்து பெண்களுக்கான மாபெரும் சிலம்ப போட்டியை நடத்தியது. திரிசூலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சியை மாநில மகளிரணி தலைவி முனைவர் கீதா தலைமையேற்று நடத்தினார்.
சிறப்பு விருந்தினராக பன்னாட்டு அமைப்பின் தமிழ் மரபு அறக்கட்டளை தலைவி முனைவர் சுபாஷினி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் 20 சிலம்ப கலை சங்கத்திலிருந்து 6 வயது குழந்தைகள் முதல் 20 வயது உடைய பெண்கள் வரை சுமார் 200க்கும் மேற்பட்டோர் சிலம்ப வீரர்கள் கலந்துகொண்டனர்.
தீப்பந்தம் ஏற்றி சிலம்பம் சுற்றுதல், சுருள் கம்பி போன்ற வீரசாகசங்கள் செய்து சிலம்பக்கலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் சிறந்த வீரர்களுக்கு பதக்கங்களும், கேடையங்களும் வழங்கப்பட்டன. எண்ணூரில் இருந்து வீர சிலம்பக் குழுவினர் 40 மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறந்த சிலம்ப வீரர்களுக்கான பரிசுகளை பெற்று சென்றனர்.
இதையும் படிங்க:சிலம்பம் சுற்றி நோபல் புக் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த மாணவிகள்