ETV Bharat / state

தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு! - அகத்தியர் மலை யானைகள் காப்பகம்

தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை-2023யில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு!

author img

By

Published : Aug 8, 2023, 5:07 PM IST

சென்னை: தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கையானது கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பு அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பிலான அறிக்கையை, இன்று (ஆகஸ்ட் 8ஆம் தேதி) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.

தமிழக வனத்துறை, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக அரசுகளின் ஒத்துழைப்போடு ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பை, கடந்த மே மாதம் 17.5.2023-ல் தொடங்கி 19.5.2023 வரை நடத்தியது. இந்த கணக்கெடுப்பு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் யானைகள் திட்ட இயக்குநரகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 26 வனத் தொகுதிகளில் உள்ள தொகுதி கணக்கெடுப்பு முறை மற்றும் தரவுகளின் அடிப்படையில், நேரடி மற்றும் மறைமுக முறைகளை உத்திகளை பயன்படுத்தி யானைகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.

பொதுவாக நீர்நிலைகளுக்கு அருகில் காட்டு விலங்குகள் அதிகம் காணப்படுவது வழக்கம். அதிலும் யானைகள் அதிகம் நேரடியாக காணப்படுகின்றது. நேரடியாக காணப்படுகின்ற யானைகளின் எண்ணிக்கை தகவல்களை அடிப்படையாக கொண்டு யானைகளின் இனத்தொகை கட்டமைப்பினை ஆராய்வதையும் முக்கிய உள்ளீடாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 2017ஆம் ஆண்டில், 2,761 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை தற்போது 2961 ஆக அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மற்ற நான்கு யானைகள் காப்பகங்களுடன் ஒப்பிடும்போது, ​​நீலகிரி கிழக்குத் தொடர்ச்சி மலை யானைகள் காப்பகத்தில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் உள்ளன, அதாவது 2477 யானைகளை கொண்டு உள்ளது.

புலிகள் காப்பகத்தில் இருக்கும் யானைகளின் எண்ணிக்கை பின்வருமாறு பட்டியல் பின்வருமாறு.
இந்த கணக்கெடுப்பின்படி, ஆண் யானை மற்றும் பெண் யானையின் சதவீதம் 1 : 2.17 ஆகவும், கிழக்குத் தொடர்ச்சி மலையில் 1105 யானைகளும், மேற்குத் தொடர்ச்சி மலையில் 1855 யானைகளும் உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையை விட மேற்கு தொடர்ச்சி மலையில் யானைகள் அதிகமாக காணப்படுகிறது.

இந்த ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பில் (12.05.2023 முதல் 16.05.2023 வரை) 1731 வனத்துறையை சார்ந்த களப்பணியாளர்கள் மற்றும் 368 தன்னார்வலர்கள் என மொத்தம் 2099 பேர் என இந்த கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். 3496 சதுர கி.மீ பரப்பளவில் 690 தொகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொன்றும் 5 சதுர கிலோ மீட்டருக்கும் பல சிறிய தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 17.05.2023 அன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 18.05.2023 அன்று யானை பிண்டம் மூலமாகவும், 19.05.2023 அன்று நீர் குமிழி முறை மூலமாகவும் 26 வனக் கோட்டங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த கணக்கெடுப்பில் டேராடூனில் உள்ள இந்திய வன விலங்கியல் நிறுவனம், மயிலாடுதுறையின் ANC கல்லூரி மற்றும் வன பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கூறிய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. தமிழக அரசின் பல்வேறு வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாகவும் குறிப்பாக யானைகள் பாதுகாப்பு இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

அகத்தியர் மலை யானைகள் காப்பகம் மற்றும் தமிழ்நாடு யானைகள் பாதுகாப்பு இயக்கம், யானைகள் வாழ்விடங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற தமிழக அரசினுடைய சீரிய நடவடிக்கைகளும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் போது வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி. சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் வனவிலங்குகளின் முதன்மைப் பாதுகாவலர் ஸ்ரீநிவாச ராவ் ரெட்டி, முதுமலை புலிகள் காப்பகத்தின் இயக்குனர் டி.வெங்கடேஷ், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: chennai metro rail: மாதவரத்தில் 1.4 கி.மீ., சுரங்கப்பாதை தோண்டும் பணியை முடித்தது நீலகிரி இயந்திரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.