ETV Bharat / state

விவசாயிகளுக்கு ஆதரவாக ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் - எஸ்டிபிஐ - விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு கொச்சைப்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

sdpi
sdpi
author img

By

Published : Jan 5, 2021, 10:50 PM IST

சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 8ஆம் தேதி சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.

சென்னை ராயபுரத்தில் வருகிற சட்டப்பேரவை தேர்தலையொட்டி எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், வடசென்னை பகுதி தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. ராயபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சராக இருந்தும், இத்தொகுதியில் அடிப்படை கட்டமைப்பு இல்லை, போதுமான வளர்ச்சிகள் இல்லை, சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்னை சரிசெய்யப்படவில்லை.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு கொச்சைப்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிற 8ஆம் தேதி ரிசர்வ் வங்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.

மேலும் அவர், சென்னை முழுவதும் மழையால் தண்ணீரில் மிதந்து உள்ளது இந்தப் பேரிடர் காலங்களில் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. தமிழக அரசு தேவையான போர் கால நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எஸ்டிபிஐ கட்சியின் தேர்தல் நிலைப்பாட்டை இந்த மாத இறுதியில் அறிவிப்போம் என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.