ETV Bharat / state

திருத்தணிகாசலம் மனு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு! - சித்த மருத்துவர்

சென்னை: சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த தாக்கல்செய்த மனுவுக்குப் பதிலளிக்க தமிழ்நாடு அரசு, சென்னை காவல் துறை ஆணையருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jun 1, 2020, 2:33 PM IST

கரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், உலக சுகாதார நிறுவனம், தமிழ்நாடு முதலமைச்சருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாகவும் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.

இந்த நிலையில், அவர் மீது மேலும் புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்க சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து திருத்தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல்செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் கே. பாலு, கரோனா தடுப்புக்காக கபசுரக் குடிநீர் குடிப்பதை ஊக்குவித்ததற்காகவும், அரசு குறித்து சில கருத்துகளைத் தெரிவித்ததற்காகவும் வழக்குப் பதியப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளது சட்டவிரோதம் என வாதிட்டார்.

காவல் துறை தரப்பில் முன்னிலையான அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் பிரபாவதி, சித்த மருத்துவம் அளிக்க திருத்தணிகாசலம் தகுதிப்பெற்றவர் அல்ல என்றும், பதிலளிக்க நான்கு வார கால அவகாசம் வேண்டுமென கோரிக்கைவைத்தார்.

நீதிபதிகள் குறுக்கிட்டு, கபசுரக் குடிநீர் குடிக்க அறிவுரை வழங்கியதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளாரா? என ஒரு வாரத்தில் தமிழ்நாடு உள் துறை செயலர், சென்னை காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.