இதுகுறித்து, தென்னக ரயில்வே அறிவிப்போன்றை வெளியிட்டிருந்தது. அதில், ”(ரயில் எண் 06027 / 06028) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவைக்கு சதாப்தி சிறப்பு ரயிலானது சென்று கொண்டிருந்தது. இந்த சிறப்பு ரயிலானது வியாழக் கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களில் செல்லும்.
இந்நிலையில், பயணிகள் எண்ணிக்கை குறைவு காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை செல்லும் சதாப்தி சிறப்பு ரயில் சேவை வரும் 2ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.
இதுபோல, சென்னையிலிருந்து டெல்லி, கன்னியாகுமரியிலிருந்து நிஜாமுதீன் உள்ளிட்ட நான்கு சிறப்பு ரயில்கள் வரும் 23ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: மாநகர போக்குவரத்து கழகத்துக்கு புதிய இயக்குநர் நியமனம்!