ETV Bharat / state

'பாஜகவின் பொய்யான வாக்குறுதிகள்; 6 லட்சம் கிராமங்களில் காங்கிரஸ் மக்களிடம் கொண்டுசேர்க்கிறது' - national media panelist Shama Mohamed

பாஜக அரசின் பொய்யான வாக்குறுதிகள் பற்றி இந்தியா முழுவதும் 6 லட்சம் கிராமங்களில் உள்ள மக்களிடம் காங்கிரஸ் நேரடியாக கொண்டு சேர்க்க இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது தெரிவித்துள்ளார்.

பாஜக அரசின் பொய்யான வாக்குறுதிகள்; 6 லட்சம் கிராமங்களில் காங்கிரஸ் மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்கிறது

author img

By

Published : Jan 25, 2023, 10:58 PM IST

சென்னை: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை தொடர்ந்து அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி சார்பில், ’அரசியலமைப்பை பாதுகாப்போம்; கையோடு கைகோர்ப்போம்’ என்ற பெயரில் பிரசார இயக்கம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது 131-வது நாளை கடந்து வருகின்ற 30ஆம் தேதி ஸ்ரீ நகரில் முடிவடைகிறது.

இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் அனைத்து மக்களின் வீடுகளை சென்றடையும் வகையில் ’அரசியலமைப்பை பாதுகாப்போம் கையோடு கைகோர்ப்போம்’ என்ற பிரசார இயக்கம் தொடங்கப்பட உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினரின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுகின்றன, ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் பூத் கமிட்டி வாரியாக கொண்டு செல்ல உள்ளோம்.

மேலும் மோடி ஆட்சியில் நாடு முழுக்க 50 கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை பல்வேறு மக்களின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டது. அத்தோடு தமிழ்நாட்டிலும் பல்வேறு சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. மோடி பிரதமராக பதவியேற்றபின் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

கடந்த 2014 முதல் 29 லட்சம் கோடி ரூபாயை வரியாக மட்டும் பாஜக அரசாங்கம் மக்களிடமிருந்து வசூலித்துள்ளது. வசூலித்த பணத்தை எங்கே செலவு செய்தார்கள் என்று கேள்வியை காங்கிரஸ் முன்வைக்கிறது, அறிவிக்கப்படாத அவசரநிலை இந்தியாவில் அமலில் உள்ளது.

இந்திய ராணுவ வீரர்களை படுகொலை செய்த பின்னரும் சீனா நாட்டில் இருந்து 100 மில்லியன் டாலர் பொருட்களை அந்நாட்டில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது. மோடி போல் மன்கி பாத்தில் பேசாமல் மக்களிடம் நேரடியாக ராகுல் காந்தி குறைகளைக் கேட்டு வருகிறார். இந்தியா முழுவதும் 6 லட்சம் கிராமங்களில் 10 லட்சம் வாக்கு சாவடிகளில், ’அரசியலமைப்பை பாதுகாப்போம்; கையோடு கைகோர்ப்போம்’ என்ற பிரசார இயக்கத்தை இந்திய தேசிய காங்கிரஸ் கொண்டு சேர்க்க இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தலில் இளங்கோவனுக்கு வெற்றி நிச்சயம் - திமுக அமைச்சர்கள் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.