ETV Bharat / state

Jawan : வசூலில் சக்கைபோடு போடும் ஜவான்.. ரூ.500 கோடியை கடந்து புதிய சாதனை! - jawan crosses 500 crore in four days

Jawan box office collection: நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரப்படம் வெளியான 4 நாட்களில் ஐநூறு கோடி ரூபாயைக் கடந்து வசூலில் புதிய சாதனையைப் படைத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வசூலில் புதிய சாதனை..ஐநூறு கோடி ரூபாயைக் கடந்த ஷாருக்கானின் ‘ஜவான்’

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 11:22 AM IST

சென்னை: ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் வெளியான நான்கு தினத்திற்குள் 520 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து புதிய வரலாற்று சாதனையை படைத்து உள்ளதாக படக்குழு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது. அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான இப்படம் வசூலில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில், திரைப்படம் வெளியான நான்கு நாட்களுக்குள் 520 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து புதிய வரலாற்று சாதனையை படைத்து உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜவான் படம் வெளியாகி மூன்றாவது நாளான கடந்த சனிக்கிழமை, அதாவது செப்டம்பர் 9 ஆம் தேதி, இந்திய திரையுலக வரலாற்றில் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியதாக கூறப்பட்டு உள்ளது.

மேலும், ஒரே நாளில் இந்திப் பதிப்பு 68 கோடியே 72 லட்ச ரூபாயும், உலகளவில் 144 கோடியே 22 லட்ச ரூபாயும் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எந்த ஒரு இந்திய திரைப்படமும் இதற்கு முன்பு இத்தகைய வசூல் சாதனையை நிகழ்த்தியது இல்லை எனக் கூறப்படுகிறது. ஜவான் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளப்பி வந்தது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் பறந்த அரசு பள்ளி மாணவர்கள்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மாணவிகள் கூறியது என்ன?

தென்னிந்திய சினிமாவில் ப்ளாக்பஸ்டர்களை வழங்கிய இயக்குநர் அட்லீ, இத்திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானை இதுவரை ரசிகர்கள் கண்டிராத தோற்றத்தில் மாஸாக காட்சிப்படுத்தி உள்ளார். மேலும், ஆக்சன், ரொமான்ஸ், காமெடி, இரண்டு விதமான கதாப்பாத்திரம், பலவிதமான லுக் என ஷாருக்கான் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

மேகும், இப்படத்தில்,தென்னிந்திய திரைத்துறையில் இருந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். அதனைத்தொடர்ந்து, தென்னிந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்று இருப்பதால், தென்னிந்தியாவிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இசையமைப்பாளர் அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

ஜவான் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று, நான்கு தினத்திற்குள் 520 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ள நிலையில், வசூலில் இன்னும் மிகப்பெரிய சாதனைகள் படைக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Actor Yogi Babu: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.