சென்னை - பூக்கடை பகுதியைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் முன்களப்பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 15ஆம் தேதி ஏழு கிணறு போர்ச்சுகீசியர் தெருவில் உள்ள வீடுகளில் கரோனா பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கு வசிக்கக்கூடிய சதக்கத்துல்லா எனும் முதியவர், தன் வீட்டில் உள்ள நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி இளம்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற பின்னர் திடீரென கதவை மூடி, இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிடவே அருகிலிருந்த நபர்கள் சதக்கத்துல்லாவைப் பிடித்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து இளம்பெண்ணின் தாயார் அளித்தப் புகாரின் பேரில் துறைமுகம் அனைத்து நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முதியவரைக் கைது செய்தனர்.
இதையும் படிங்க : பெண் ஊழியருடன் மண உறவைத் தாண்டிய காதலில் இருந்த பில்கேட்ஸ்: வெளியான அதிர்ச்சித் தகவல்!