ETV Bharat / state

முதன்மை அமர்வு நீதிமன்றம் - சிறப்பு நீதிமன்றம் - உயர் நீதிமன்றம் - ஜவ்வாக இழுக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு! - ED

Senthil Balaji Bail petition: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என உயர் நீதிமன்றத்தில் விளக்கம் பெற்று வருமாறு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 1:21 PM IST

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சரி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரிக்கப்பட்டார். அதன் பின்னர், 5 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக்குப் பின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆஜர்படுத்தபட்டார். அப்போது, மீண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அது மட்டுமல்லாமல், அன்றைய தினமே செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்களையும் டிரங்கு பெட்டியில் வைத்து அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 17ஆம் தேதி மாற்றப்பட்டது.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நேரில் ஆஜரான செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அமைச்ச செந்தில் பாலாஜி தரப்பு மனுத் தாக்கல் செய்தது.

ஆனால், இந்த ஜாமீன் மனு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இவ்வாறு சிறப்பு நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, அமைச்சரிடம் அமலாக்கத்துறை விசாரணை முடிந்து விட்டதால், கடந்த 2 மாதங்களாக நீதிமன்றக் காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யும்படி செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து சிறப்பு நீதிமன்றத்தை அணுகிய செந்தில் பாலாஜி தரப்புக்கு, எம்பி, எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றம் ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் பெற்று வரும் அறிவுறுத்தி உள்ளது.

இதையும் படிங்க: "செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்" - முதன்மை அமர்வு நீதிபதி அல்லி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.