ETV Bharat / state

Senthil Balaji: செந்தில் பாலாஜியின் சகோதரர் கட்டி வரும் வீடு முடக்கம் - முழு பின்னணி! - அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கட்டி வரும் பங்களா வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர், சட்டவிரோதமான முறையில் பணப் பரிவர்த்தனை நடைபெற்ற ஆவணங்கள் சிக்கி உள்ளதால், நிலத்தை விற்கவோ, வீடு கட்டவோ அனுமதி அளிக்கக் கூடாது என சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 9, 2023, 10:33 PM IST

சென்னை: சட்டவிரோதமாக பணப்பரிமாற்ற செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். மேலும் 5 நாட்கள் அவரை காவல் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் நேற்று முன் தினம் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கத் தொடங்கியது. மேலும் 12ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும் என்று அமலாக்கத்துறை அறிவித்திருந்தது.

கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சி மேலக்கரூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், தன் மனைவி நிர்மலாவின் பெயரில் கட்டி வரும் புதிய பங்களா வீட்டில் அமலாக்கத்துறையினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அசோக்குமாரின் ஆடிட்டர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் வீட்டை முடக்கினர்.

மேலும் 2 ஏக்கர் 49.5 சென்ட் நிலத்தில், அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரில் கட்டப்பட்டு வரும் புதிய மாளிகை கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளக் கூடாது என்றும், நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பதற்கோ தானமாக வழங்குவதற்கோ மேலக்கரூர் சார் பதிவாளர் அனுமதிக்கக் கூடாது என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் வழங்கியுள்ளனர்.

நிலம் வாங்கியது தொடர்பாகவும், வீடு கட்டப்படுவது தொடர்பாகவும் சட்டவிரோதமான முறையில் பணப் பரிவர்த்தனை நடைபெற்ற ஆவணங்கள் சிக்கி உள்ளதால் வழக்கு முடியும் வரை வீடு கட்டும் பணியை முடக்கியும், நிலத்தை விற்கவும் தடை செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் நிர்மலாவுக்கு நிலத்தை தானமாக வழங்கிய அவரது தாய் லட்சுமி மற்றும் நிலத்தை லட்சுமிக்கு விற்ற தொழிலதிபரின் மனைவி அனுராதா ரமேஷ், ஆகியோர் சிட்டி யூனியன் வங்கி மூலம் மேற்கொண்ட பணப் பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்களில் தொடர்புடையவர்கள் என்பதால், அவர்களும் விசாரணை வளையத்திற்குள் விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே ஆகஸ்டு 2ஆம் தேதி கரூர், திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்கள் மேற்கொண்ட சோதனையில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவராக கூறப்படும் சாமிநாதன் என்பவர் மறைத்து வைத்திருந்த 60 நிலப் பத்திரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே செந்தில்பாலாஜி கைது நடவடிக்கையில் எந்தவிதமான முதலுதவிகள் செய்யும் வசதிகள் அமலாக்கத்துறையிடம் இல்லை என நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது இரண்டு செவிலியர்கள் மற்றும் ஈ.எஸ்.ஐ (ESI) மருத்துவர்கள் சுழற்சி முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கவனித்து வருகின்றனர்.

அவர் தினமும் என்ன மாத்திரை உட்கொள்ள வேண்டும் என்பதையும், விசாரணைக்கு நடுவே சீரான உடல் நிலை உள்ளதா எனவும் மருத்துவர்கள் சோதனை செய்து வருகின்றனர். மேலும் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் செந்தில் பாலாஜியிடம் இரவு நேரத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதில்லை.

இரவு 9 மணி வரை மட்டுமே அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் உறங்க தனி அறையும், பின் காலையில் அலுவலகத்திலேயே நடைபயிற்சி மேற்கொள்ள அமலாக்கத்துறையினர் அனுமதி வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சொத்து குவிப்பு வழக்கு: விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.