ETV Bharat / state

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உயிரிழப்பு! - சென்னையில் பத்திரிக்கையாளர் உயிரிழப்பு

சென்னை: 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் உடல் நலக்குறைவால் சுதாங்கன் உயிரிழந்தார்.

ஊடகத்துறையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் உயிரிழப்பு!
Senior journalist dead
author img

By

Published : Sep 12, 2020, 10:40 PM IST

சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்தவர் மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன். இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றியவர்.

இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 12) அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திரைப்பட நடிகர் சத்தியராஜ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவரது இறுதி சடங்கு நாளை காலை 11 மணியளவில் பெசண்ட் நகர் மின் மயானத்தில் நடைப்பெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.