ETV Bharat / state

கூட்டுறவு கடைகளில் தரம் குறைவான வெங்காயம் விற்பனை!

சென்னை: கூட்டுறவு காய்கறி கடைகளில், விற்பனை செய்யப்படும் வெங்காயத்தில் தரம் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

onion
onion
author img

By

Published : Dec 12, 2019, 8:58 PM IST

தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை இல்லாத அளவுக்கு, வெங்காயத்தின் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக உள்நாட்டு உற்பத்தி 30 முதல் 40 விழுக்காடுவரை குறைந்துள்ளதே இந்த பற்றாக்குறைக்குக் முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் ஒரு கிலோ வெங்காயம் விலை, 160 ரூபாயை எட்டியுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில், கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு சங்கங்கள் நடத்தும், பண்ணை பசுமை காய்கறி கடைகளில், ஆந்திர வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கிடையே, மக்களின் வெங்காய பற்றாக்குறையை போக்க எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

எகிப்து வெங்காயம் சந்தைக்கு வந்த பிறகு வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று அதன் விலை 10 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதாகவும் மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.

சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 140 முதல் 160 ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் 100 முதல் 120 ரூபாய்வரை விற்கப்படுகிறது. சற்று தரம் குறைவான வெங்காயத்தின் விலை 70- 80 ரூபாயில் உள்ளது.

கூட்டுறவு சிறப்பு அங்காடியில் 50 ரூபாய் முதல் 85 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அவை தரம் குறைந்ததாக உள்ளதாகவும், தோலை அதிகம் நீக்கினால்தான் பயன்படுத்த முடிவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: பெரம்பலூர் அருகே 400 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு!

Intro:Body:

சென்னை:

கூட்டுறவு கடைகளில் தரம் குறைவான வெங்காயம்.

வெங்காய விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. 200 ரூபாயை தொட்ட வெங்காய விலை சற்று குறைந்து 100 ரூபாயை அடைந்தாலும் இன்னும் சாதாரண மக்கள் வாங்கும் விலைக்கு வரவில்லை. சென்னையை பொருத்தவரை கோயம்பேடு காய்கறி சந்தையில் 1 கிலோ சின்ன வெங்காயம் 140 முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் 100 முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சற்று தரம் குறைவான வெங்காயத்தின் விலை 70- 80 ரூபாயில் உள்ளது. எகிப்து வெங்காயம் சந்தைக்கு வந்த பிறகு வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று அதன் விலை 10 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும், தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதாகவும் மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர். அதிக விலை இருந்துபோது வெங்காயம் வாங்கியதாகவும், தற்போது அதன் விலை குறைந்ததால் வாங்கிய விலைக்கே விற்பனை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வெங்காயம் விலை ஏற்ற குறித்த கேள்விக்கு கூட்டுறவு கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்படுகிறது. தமிழக அரசின் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் 50 ரூபாய் முதல் 85 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அவை தரம் குறைந்ததாக உள்ளதாகவும், தோலை அதிகம் நீக்கினால்தான் பயன்படுத்த முடிவதாகவும் பொதுமக்கள் கூறினர். வெளியில் உள்ள சில்லறை விற்பனை கடைகளிலும், சூப்பர் மார்கெட்டுகளிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் நீண்ட தூரத்திலிருந்தும் மக்கள் கூட்டுறவு கடைகளில் வந்து வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.

Conclusion:visual in mail
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.