கடந்த சில நாள்களுக்கு முன்பு விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் பரப்புரையின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜிவ் காந்தி கொலை, இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது இந்திய அமைதிப்படையின் செயல்பாடு குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சீமானின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் மனித உரிமைத் துறையின் வடசென்னை மாவட்ட தலைவர், நாம் தமிழர் கட்சியைத் தடைசெய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் ராஜிவ் காந்தியை விடுதலைப்புலிகள் இயக்கம் கொலை செய்தது சரி என்றும் இந்திய ராணுவத்தை அவமதிக்கும் விதமாக பேசியுள்ளார். மேலும், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசிவரும் சீமானை விசாரித்து தக்க தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ‘மறைந்த தலைவர்களை அவதூறாகப் பேசக்கூடாது’ - ஜி.கே. வாசன்