தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான தேர்தல் ஒன்பது மாவட்டங்கள் நீங்கலாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 27ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில், 76 புள்ளி 19 சதவீத வாக்குகள் பதிவாகின.
27 மாவட்டங்களிலுள்ள 46 ஆயிரத்து 639 ஊரக உள்ளாட்சி ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 25,008 வாக்குச் சாவடிகளில் நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இரு தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்படுகிறது.