ETV Bharat / state

ஆளுநர் பதவியேற்பு விழா: எடப்பாடி பழனிசாமியிடம் கனிமொழி பேசியதும் நடந்ததும் என்ன? - ஆளுநர் பதவியேற்பு விழாவில் நடந்தது என்ன

ஆளுநர் பதவியேற்பு விழாவில் 8ஆவது வரிசையில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்சசையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் மாளிகை நெறிமுறைப்படியே இருக்கை ஒதுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

seating-arrangement-for-edapadi-palanisamy-in-governor-swearing-function
ஆளுநர் பதவியேற்பு விழா: எடப்பாடி பழனிசாமியிடம் கனிமொழி பேசியதும் நடந்ததும்!
author img

By

Published : Sep 21, 2021, 2:28 PM IST

Updated : Sep 21, 2021, 2:51 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி கடந்த 18ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இதற்கான பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடந்தது. திமுக, அதிமுக, பாஜகவைச் சேர்ந்த முக்கியத் தலவைர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு பதவியேற்வு விழாவில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டது.

இவ்விழாவில், 8ஆவது வரிசையில், ஒன்றிய இணையமைச்சர் எல். முருகனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. ஆனால், இணையமைச்சர் முருகன் 9ஆவது வரிசையில் அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் அமர்ந்தார். இதனைப் பார்த்த ஊழியர் ஒருவர் எடப்பாடி பழனிசாமியையும், எல்.முருகனையும் முன்வரிசையில் அமருமாறு கேட்டுக்கொண்டார்.

seating-arrangement-for-edapadi-palanisamy-in-governor-swearing-function
முன்வரிசையில் அமரச்சொன்ன கனிமொழி

இதனைப் பார்த்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, எல். முருகனிடம் முதலில் தனியாக சென்று முன்வரிசையில் அமருமாறு கேட்டுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியையும் முன்வரிசையில் அமர கனிமொழி கேட்டுக்கொண்டார். அவர்கள் இருவரும் அங்கேய அமர விருப்பம் தெரிவித்து அமர்ந்தனர்.

இது தொடர்பான உண்மையான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், நெறிமுறைப் படியே அமைச்சர்களுக்கு அடுத்து எதிர்க்கட்சித் தலைவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்பின்னரே, எம்.பி., எம்.எல்.ஏக்கள் அமர்ந்திருந்தனர்.

இதையும் படிங்க: என்றும் மார்க்கண்டேயன் எங்கள் முதலமைச்சர் - பொதுமக்கள் புகழாரம்

Last Updated : Sep 21, 2021, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.