ETV Bharat / state

'நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு உறுதி'

author img

By

Published : Oct 2, 2021, 1:44 PM IST

தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

திருச்சி: இன்று (அக்.2) திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள உப்பு சத்தியாகிரகம் நினைவுத் தூணில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்திற்கு, அன்பில் மகேஷ், மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

நவம்பர் 1ஆம் தேதிமுதல் பள்ளிகள் திறப்பு

தொடர்ந்து, காந்தி ஜெயந்தி, 75ஆவது ஆண்டு விடுதலை நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் மாரத்தான் ஓட்டத்தினை, மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் அன்பில் மகேஷ் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் அன்பில் மகேஷ் கூறுகையில்,

”நவம்பர் 1இல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதிரியான கருத்துகளை அறிக்கையாக அளித்திருந்தனர்.

இதை நான் முதலமைச்சரிடம் வழங்கியபோது அவர் சொன்னது ஒன்றுதான் இது குழந்தைகள் உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயம் மருத்துவக் குழு என்ன சொல்கிறார்களோ அதை நாம் முழுமையாகக் கடைப்பிடிப்போம்” என்று கூறினார்.

இதையும் படிங்க:'வீரபாண்டி ராஜா மறைவு தூண் சாய்வதுபோல' - பிறந்த நாளிலேயே மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.