சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. பல இடங்களில் மழைநீர் ஆறு போல் செல்வதால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்துவருகின்றனர். மேலும் நாளை (நவ. 30) வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், விழுப்புரம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர், கடலூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 29) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
மேலும், அரியலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சேலம், வேலூர், பெரம்பலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 29) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?