ETV Bharat / state

அறநிலையத்துறை சீல் வைத்த பள்ளியை இயக்க அனுமதிக்க கோரி வழக்கு!

author img

By

Published : Aug 22, 2020, 8:07 PM IST

சென்னை : இந்து சமய அறநிலையத்துறை சீல் வைத்த பள்ளி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை அனுமதிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறநிலையத்துறை சீல் வைத்த பள்ளியை இயக்க அனுமதிக்க கோரி வழக்கு!
அறநிலையத்துறை சீல் வைத்த பள்ளியை இயக்க அனுமதிக்க கோரி வழக்கு!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கத்தில் 46 கிரவுண்ட் மற்றும் 1, 600 சதுர அடி நிலமானது 99 ஆண்டுகள் குத்தகையில் தர்மமூர்த்தி ராவ்பகதூர் என்பவரால் நிறுவப்பட்ட தர்மமூர்த்தி ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி அறக்கட்டளைக்கு 1900 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது.

1969 ஆம் ஆண்டில் அந்த நிலத்தில் கல்வி பணிளை மேற்கொள்ள முடிவெடுத்த அறக்கட்டளை நிர்வாகம் 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி என்ற கல்வி நிலையத்தை நிறுவிய செயல்பட்டிற்கு கொண்டுவந்தது.

ஏறத்தாழ ஆயிரம் மாணவ- மாணவிகள் படித்து வருகின்ற அப்பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கப்பட்டுகிறது.

இந்நிலையில், குத்தகைக்கான ஆண்டு தொகையை கொடுக்க முடியாததால் 12.5 கிரவுண்ட் நிலம் மீண்டும் கோவில் நித்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

இந்நிலையில், மேலும் சில கிரவுண்ட் நிலத்தை வழங்கவும் அறக்கட்டளை தயாராக இருந்ததாக கூறப்படுகிறது.

2013ஆம் ஆண்டு முதல் 2019 வரை மாதம் தலா ஒரு லட்சத்து 25 ஆயிரமும், அதன் பின்னர் ஜூன் 2020 வரை ஒவ்வொரு மாதமும் 1 லட்சத்து 92 ஆயிரம் செலுத்தி வந்துள்ளது.

இது தவிர இரண்டரை கோடி ரூபாயை அறக்கட்டளை சார்பில் செலுத்திய நிலையில், நிலுவைத்தொகை மற்றும் வட்டியை செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், பள்ளி வளாகத்திற்கு வந்த அறநிலையத்துறையினர் பள்ளி வளாகத்திற்கு சீல் வைத்து சென்றுள்ளனர்.

ஆயித்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவரும் பள்ளிக்கு அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளியில் படித்துவரும் மாணவர்களின் பெற்றோர்களான டி.ஜெரினா, கே.காயத்ரி, எம்.ஆர்.பரகத்நிஷா, பி.எம்.ஜெயலட்சுமி, ஏ.ராமசந்திரன், கே.மனோஜ்குமார், ஏ.ராமநாதன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதில், "அறநிலையத்துறை உதவி ஆணையர் எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து ஜூலை 6ஆம் தேதியே மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்கும், கோவில் செயல் அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இருப்பினும், மாணவர்களின் நலனை காக்கும் நோக்கில் மெட்ரிக் பள்ளி இயக்குநர் செயல்படவில்லை.

மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு மெட்ரிக் பள்ளிகள் இயங்குவதற்கு தேவைப்படும் குறைந்தபட்சம் 6 கிரவுண்ட் நிலத்தையாவது வழங்க மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உதவி இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

அதேபோல, பள்ளி இயங்கும் கட்டடத்திற்கு சீல் வைப்பதற்கு முன்பாக பெற்றோரிடம் அறநிலையத்துறையும் முறையாக தெரிவிக்கவில்லை.

எனவே, கீழ்ப்பாக்கம் சீதா கிங்ஸ்டன் பள்ளி செயல்படுவதற்கு தேவையான 6 கிரவுண்ட் நிலத்தை அறநிலையத்துறையிடமிருந்து பெற்று, பள்ளி தொடர்ந்து செயல்படுவதற்கான உரிய நடவடிக்கையை எடுக்க மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், வழக்கு குறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரும், இந்து சமய அறநிலையத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.